16950 அன்புள்ள ஆரியசிங்க.

செ.அன்புராசா. மன்னார்: முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).

xlii, 146 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4609-15-0.

அருட்தந்தை அன்புராசா அவர்களின் மும்மொழிகளிலும் எழுதப்பட்ட இந்த நூல்  2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பமாகி இலங்கையின் தென்பகுதியை பரபரப்பாக்கிய “அரகலய” வெகுஜனப் போராட்டத்தின் பின்னணியில் தென்னிலங்கையின் ஒரு போராட்டக்கார நண்பனுக்கு எழுதப்பட்ட கடிதங்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளதுடன் தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தை தென்னிலங்கை மக்களுக்கு மட்டுமல்லாது முழு உலகிற்கும் எடுத்துச் சொல்வதாகவும் இந்நூல் அமைந்துள்ளது. விருதுபெற்ற ஒரு எழுத்தாளராகத் தன்னை வளர்த்துக்கொண்ட  அருட்தந்தை செபமாலை அன்புராசா அவர்கள் ஈழத்தமிழ் மக்கள் பல ஆண்டுகளாகச் சிந்திய இரத்தம், வடித்த கண்ணீர், பயத்தில் உறைந்து போயிருந்த இரவுகள், பசியோடும் பட்டினியோடும் கிடந்த நாட்கள், உடலாலும் உள்ளத்தாலும் பட்ட சித்திரவதைகள், வன்புணர்வுகளாலும் வதைக்கப்பட்டதாலும் அடைந்த வலிகள்-அவமானங்கள், இழப்புகளில் தோய்ந்திருந்த தசாப்தப் பொழுதுகள் போன்றவையெல்லாம் இனியொரு பொழுதும் எவருக்கும் எத்தரப்பினருக்கும் ஏற்படுவதற்குக் காரணமாக நம்மில் யாரும் இருந்துவிடக் கூடாது என்பதும் இதிலுள்ள முப்பது கடிதங்களையும் ஆசிரியர் எழுதுவதற்கான பிரதானமான நோக்கமாகவுள்ளது.

ஏனைய பதிவுகள்

Beste Online

Content Book Of Dead: Slot beat the beast mighty sphinx Unsere Top Casino Slots Tipps Spielthema, Sound Und Grafiken Häufig Gestellte Fragen Zu Den Besten