தங்க முகுந்தன். யாழ்ப்பாணம்: தங்க. முகுந்தன், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).
28 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15சமீ.
யாழ்ப்பாண நூலக எரிப்பையொட்டிய சம்பவங்களை பதிவுசெய்யும் வகையில் ஆசிரியரால் ‘யாழ்ப்பாண பொதுசன நூலகம்: எரிக்கப்பட்டு 34 ஆண்டுகள் 01.06.2015: உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு” என்ற நூல் எழுதப்பட்டு 2015இல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாகக் கருதப்படும் இந்நூல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வெ.யோகேஸ்வரன் அவர்களதும் அவரது துணைவியாரினதும் அரசியல் கொலைகள் பற்றியும் அது தொடர்பான சில பின்னணிச் சம்பவங்கள் பற்றியும் சுருக்கமாக பதிவுசெய்கின்றது.