காசி. ஆனந்தன் (இயற்பெயர்: காத்தமுத்த சிவானந்தன்). கொழும்பு: படைஞர் பாசறை, 1வது பதிப்பு, மார்ச் 1970. (கொழும்பு 2: அருளொளி அச்சகம்).
(4), 24 பக்கம், விலை: 50 சதம், அளவு: 18×12 சமீ.
படைஞர் பாசறையின் கன்னித் தமிழ் வெளியீடாக உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் உரைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. தமிழகத்திலும் ஈழத்திலும் கவிஞர் காசி ஆனந்தன் ஆற்றிய சொற்பொழிவுகளில் இருந்து தமிழர் எழச்சிக்குப் யன்படும் வகையில் அமைந்த கருத்துக்களைத் திரட்டி இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழா உன்னைத்தான் விழி! எழு!, தமிழ்விழா தழல்விழா ஆகுக, தமிழ் எங்கே தமிழா?, கிளித் தமிழன், மாணவர்களே விழித்தெழுவீர் !, தமிழே தமிழே, முதுகெலும்பில்லாத கணவர், தூங்கடா தூங்கு, குடும்பக் கட்டுப்பாடு தமிழர் குலத்துக்கே கேடு, தவிக்குது பார் தமிழச் சாதியே, சொந்த அரசு தேவை, பழைய பானையை விட இழிவானதா தமிழ்?, ஒரே தமிழரா? தமிழ் அழிகிறது! தடுப்போம் வாரீர், கடலினைத் திடல் செய்வோம், தேய்ந்த தமிழா திருந்த மாட்டாயா?, காந்தி அடிகள் பாவம் கடவுளே! மொழி ஒரு கருவியா?, இஸ்லாமிய நண்பர்களே, சிங்களவருக்காகவே போராடுகிறேன், மனைவியும் வேலைக்காரியும், பொதுவுடைமைவாதிகள், போராடு ஆகிய தலைப்புகளில் இவ்வுணர்வுரைகள் இடம்பெற்றுள்ளன.