இராமநாதன் நாகமணி ஸ்ரீ ஞானேஸ்வரன். திருக்கோணமலை: ஸ்ரீராம் பதிப்பகம், 159 A, கடல்முக வீதி, 1வது பதிப்பு, ஜீலை 2022. (திருக்கோணமலை: ஸ்ரீராம் பிரிண்டர்ஸ், 159A, கடல்முக வீதி).
287 பக்கம், விலை: ரூபா 950., அளவு: 22×14.5 சமீ.
தமிழினத்தின் நீண்டகால விடுதலைப் போராட்டம் சர்வதேச, பிராந்திய வல்லரசுகளின் துணையுடன் மிக நுட்பமாக முடக்கப்பெற்றுள்ள நிலையில், போருக்குரிய ஒழுக்கவிதிகளையும் அறக் கோட்பாடுகளையும் பறந்தள்ளி, வேதனைகளும் வலிகளும் நிரம்பிய, முறை தவறி முன்னெடுக்கப்பட்ட அந்தக் கொடூர யுத்தத்திற்கு எதிரான நியாயக் குரலை அறிவுசார்ந்து மக்கள் விழிப்புணர்விற்கு முன்வைப்பதாக இந்த நூலாக்கம் வெளிவந்திருக்கிறது. இயமான வகையில் விளக்கங்களுடன், எளிமையான மொழிநடையில் மக்களால் மிக இலகுவாக உள்வாங்கக்கூடிய இலக்குடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணம், இனப்படகொலைதான் நடைபெற்றது என்பதைநிரூபணம் செய்வதற்காக நீதி தேடும் மக்கள் குரலை இன்னமும் புரிதலுடன் முன்னகர்த்த உதவுகின்றது. இதில் பன்னாட்டுக் குற்றங்கள் (மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள், இனப்படுகொலை, ஆக்கிரமிப்பு), பன்னாட்டு நீதிமன்றங்களும் தீர்ப்பாயங்களும் (பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம், நீதிக்கான பன்னாட்டு நீதிமன்றம், நீதிக்கான பன்னாட்டு நிரந்தர நீதிமன்றம், கலப்பு நீதிமன்றங்கள், பன்னாட்டுத் தீர்ப்பாயங்கள், உசாத்துணை: விசேடமானது), நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் (ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை தீர்மானங்கள் (தீர்மானம் 46/1-23 மார்ச் 2021, தீர்மானம் 34/1-23 மார்ச் 2017, தீர்மானம் 30/1-01 ஒக்டோபர் 2015, தீர்மானம் ளு 11/1-27 மே 2009), கனடாஒன்ராறியோ மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழினப் படுகொலை அறிவூட்டல் வார முன்மொழிவு, நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், இந்தியா-தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலைத் தீர்மானம், நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் 3ஆவது அமர்வு முகவுரை) ஆகிய அறிக்கைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.