16956 மனோ இராஜசிங்கம் நினைவுரை 2012 : இலங்கை நெருக்கடியில் சர்வதேசத் தலையீடுகளும் தமிழர் அரசியலின் எதிர்காலமும்.

வீ.தனபாலசிங்கம். கொழும்பு: மனோ இராஜசிங்கம் நினைவுக் குழு, 1வது பதிப்பு, 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).

20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5சமீ.

தினக்குரல் பிரதம ஆசிரியர் திரு.வீ.தனபாலசிங்கம் அவர்கள் நிகழ்த்திய நினைவுரை. மனோரஞ்சன் இராஜசிங்கம் 1950களில் பிறந்த முற்போக்குத் தீவிரவாத சந்ததியைச் சேர்ந்தவர். கொழும்பு வெஸ்லி கல்லூரியில் உயர் கல்வி பெற்று பின்னர் பிரித்தானியாவில் சசெக்ஸ் பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் இளமாணிப் பட்டத்தையும் அபிவிருத்தியியல் துறையில் முதுமாணிப் பட்டத்தினையும் பெற்றவர். இங்கிலாந்தில் திரு இரத்தினசபாபதி அவர்களின் தலைமையில் 1970களில் ஈரோஸ் அமைப்பு உருவாக்கப்பட்ட வேளை அவ்வமைப்பில் இணைந்து செயற்பட்டவர். பின்னர் General Union of Eelam Students (GUES) என்ற மாணவர் அமைப்பினை உருவாக்குவதில் பங்களித்திருந்தார். ஈழமாணவர்களினால் நடத்தப்பட்ட முதலாவது பத்திரிகை எனக் கருதப்படும் Progressive Voice என்ற அரசியல் பத்திரிகையிலும் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். 1981இல் இலங்கை திரும்பியதும் EPRLF என்ற அமைப்பில் இணைந்து செயற்பட்டார். அதிலிருந்து 1985இல் கொள்கை முரண்பாடு காரணமாக வெளியேற்றப்பட்டார். அதன்பின்னர் தீவிர போராட்ட அரசியலிலிருந்து விலகிய அவர் 1989இல் “மன்று” என்ற நிறுவனத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுவி ஆய்வுகள், சூழல் பாதுகாப்பு விடயங்கள், உள்ளூர் அமைப்புகளின் ஆற்றல் மேம்பாட்டுக்கான திட்டங்கள் எனப் பல்வேறு சமூக நலத்திட்டங்களில் ஈடுபட்டு வந்தார். 1995இல் ’விடிவானம்” என்ற வாரப் பத்திரிகையைத் தொடங்கிய இவர் பின்னர் ‘தினக்கதிர்” என்ற பெயரில் தினசரியாக அதனைக் கொண்டு நடத்திவந்தார். 2002இல் விடுதலைப் புலிகளால் தடைசெய்து மூடப்படும் வரை அப்பத்திரிகையை நடத்திவந்தார்.

ஏனைய பதிவுகள்