ஏ.பீர் முகம்மது. அக்கரைப்பற்று-2: பேஜஸ் புத்தக இல்லம், 117, பட்டினப்பள்ளி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2021. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B. மின்சார நிலைய வீதி).
137 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-6047-01-6.
அமரர் எஸ்.பொ. அவர்களின் வாழ்வியலில் எம்மவர்களால் அதிகம் பேசப்படாத பக்கமொன்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இனங்களுக்கிடையே விசுவாசமும் ஒற்றுமையும் வேண்டி நிற்கின்ற இன்றைய சமூக அரசியல் சூழலில் அவரது வாழ்வை ஆசிரியர் முன்னிலைப்படுத்தி எடுத்துக் கூறுவதற்கு முன்வந்துள்ளார். “மனித நேயமே எனது மதம்” என்ற குரலை உரத்து எழுப்பிய எஸ்.பொவின் தனித்துவ முழுமையில் முஸ்லிம் நேசிப்பின் பெரும் பின்னமொன்றைப் பேச விழைகிறது இந்நூல். பிறப்பும் திறப்பும், வழியும் மொழியும், மலையும் பனையும், படிப்பும் நடிப்பும், இருப்பும் ஒளிப்பும், பொலிவும் பொழிவும், அயலும் புயலும், உலாவும் விழாவும், பறப்பும் கறுப்பும், விழைந்ததும் விளைந்ததும், விதியும் கதியும், மனமும் மணமும், பிறையும் நிறையும், சுவையும் சூடும், களிப்பும் கழிப்பும், கட்சியும் காட்சியும், உறைப்பும் முடிப்பும் ஆகிய 17 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.