வீ.பரந்தாமன். யாழ்ப்பாணம்: பண்டிதர் வீ.பரந்தாமன், 1வது பதிப்பு, 1997. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(10), 26 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 20×14.5 சமீ.
குமரிக்கண்டம் (kumari Kandam) என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இந்தியாவின் தெற்கே இருந்ததாகக் கருதப்படும் ஒரு புராண இழந்த கண்டத்தைக் குறிக்கிறது. இது பண்டைய தமிழர் நாகரிகத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான நிலப்பகுதியாகவும் கருதப்படுகிறது. குமரிக்கண்டம், குமரி நாடு என்ற வேறு பெயர்களாலும் இப்பகுதி அழைக்கப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அறிஞர்களின் ஒரு பகுதியினர் இலெமூரியா என்று அழைக்கப்படும் ஒரு மூழ்கிய கண்டம் இருந்திருக்கலாம் என்று ஊகித்தனர். ஆபிரிக்கா, ஆத்திரேலியா, இந்தியா மற்றும் மடகாஸ்கர் நாடுகளுக்கு இடையே காணப்படும் புவியியல் மற்றும் பிற ஒற்றுமைகளை தொடர்புபடுத்தி விளக்க முயன்றபோது அவர்களுக்கு இச்சிந்தனை தோன்றியது. தமிழ் மறுமலர்ச்சி ஆதரவாளர்களின் ஒரு பகுதியினர் இக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டனர். பண்டைய தமிழ் இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி தங்கள் நிலப்பகுதிகளில் உலாவிய பாண்டியர்களின் புராணக்கதைகளுடன் அவர்கள் இதை இணைத்துக் கொண்டனர். பண்டைய தமிழர் நாகரிகம் இலெமுரியா கண்டத்தில் இருந்தது. அக்கண்டம் ஒரு பேரழிவு நிகழ்ந்து கடலுக்குள் சென்றது என்று இந்த எழுத்தாளர்கள் கூறுகின்றனர். 20-ஆம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர்கள் இந்த மூழ்கிய இலெமூரியா கண்டத்தைப் பற்றி விவரித்துக் கூற “குமரிக் கண்டம்” என்ற பெயரை பயன்படுத்தினர். இவ்வறிஞர்களின் கருத்துப்படி இலெமூரியாவில் ஆட்சிசெய்த பாண்டியர்களின் காலத்தில் தமிழ் இலக்கிய கல்வியாளர்கள் உருவாக்கிய இரண்டு சங்கங்கள் இங்கு இருந்ததாக கருதப்படுகிறது. தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் பழங்காலத்தை நிரூபிக்க உதவும் குமரி கண்டம் தமிழர்கள் நாகரிகத்தின் தொட்டில் என அவர்கள் கூறுகின்றனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27088).