வரதன் கிருஷ்ணா. கனடா: சமாதானத்திற்கான கனேடியர்கள்-சிறீலங்கா சார்பு, 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிறின்டர்;ஸ், பிரவுண் வீதி).
xviii, 122 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20×14 சமீ., ISBN: 978-624-5814-00-8.
தற்போது கனடாவில் வாழும் மலையகப் பத்திரிகையாளர் வரதராஜன் அவர்கள் தான் வாழ்ந்த மண்ணையும் அங்கே நிகழ்ந்த நீண்டகால உரிமைப் போராட்டத்தையும் மறக்காது அவை தொடர்பான ஒரு முக்கிய பதிவை மேற்கொள்ளும் நோக்கில் இந்நூலை 83 அத்தியாயங்களில் எழுதியுள்ளார். நீதிக்கும் சமத்துவத்திற்குமான மலையக மக்களின் உரிமைப் போராட்டம், அதன் வரலாறு, போராட்டத்தை நியாயப்படுத்தம் வரலாற்று அரசியல் சமூகவியல் காரணிகள் என ஒரு முக்கிய பரிமாணத்தை இந்நூலின் தொனிப்பொருளாகக் கொண்டுள்ளார். அக்காலத்தில் மலையக இளைஞர்கள் போராட்டங்களில் எவ்வாறாக ஈர்க்கப்பட்டார்கள்? அவர்களது பங்களிப்பு என்ன? எத்தகைய இடர்களையும் சவால்களையும் அவர்கள் எதிர்நோக்கினார்கள்?அவர்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்கள் எவை? என்பன போன்ற பல வினாக்களுக்கு சொந்த அனுபவங்களின் வாயிலாகவும் தான் பெற்ற, அனுபவித்த வரலாற்றறிவின் தேடல் மூலமும் உண்மை நிலையை ஆவணப்படுத்தியிருக்கிறார்.