க.வேலுப்பிள்ளை (மூலம்), ம.இரகுநாதன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: தமிழ்த்துறை, கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி).
xix, 634 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-624-97806-6-8.
ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை (1860-1944) அவர்கள் யாழ்ப்பாணத்தில் வசாவிளான் சிற்றூரில் பிறந்தவர். “சுதேச நாட்டியம்” என்ற பத்திரிகையை 40 ஆண்டுகள் நடத்தியவர். சமூகத்தில் தான் கண்ட குறைபாடுகளையெல்லாம் துணிந்து கண்டித்து வந்தமையால் “கண்டனங் கீறக் கல்லடியான்” என்றும் “கண்டனப் புலி” என்றும் சிறப்புப் பெயர்களையும் பெற்றவர். யாழ்ப்பாண வைபவ கௌமுதி என்ற சரித்திர ஆராய்ச்சி நூல் 1918இல் வண.சா.ஞானப்பிரகாசர், சீ.டீ.வேலுப்பிள்ளை போதகர், ச.குமாரசுவாமி ஆகியோரின் உதவியுடன் ஜயஸ்ரீ சாரதா பீடேந்திரசாலையில் முதற்பதிப்பாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. இந்நூலில் புராதன காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரையிலான யாழ்ப்பாணத்தின் வரலாற்றையும், அதன் பின்னணியையும் அன்று வாழ்ந்த பெரியோர்களின் வாழ்க்கைக் குறிப்புகளையும் காணமுடிகின்றது. நூலின் பிற்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள இடப்பெயர்கள் தொடர்பான விரிவான ஆய்வும் இடம்பெற்றுள்ளது.