16967 சுவடுகள்-பாகம்1.

ஜீவைரியா ஷெரீப் (இயற்பெயர்: எம்.சி.எம்.ஷெரீப்). மூதூர்-1: அக்கரைச்சேனை கிராம அபிவிருத்திச் சங்கம், புதிய இறங்குதுறை வீதி, இணை வெளியீடு, மூதூர் 4: எம்.எம்.கே. முகம்மது பௌண்டேஷன், நொக்ஸ் வீதி, 1வது பதிப்பு, ஜீன் 2011. (திருக்கோணமலை: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ், 43, திருஞானசம்பந்தர் வீதி).

441 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 21.5ஒ14.5 சமீ., ISBN: 978-955-52948-0-5.

வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய எம்.சி.எம்.ஷெரீப் அவர்களின் பாதச் சுவடுகள் பதிந்த அவர் பிறந்த ஊர், கற்ற பாடசாலை, பல்கலைக்கழகம், பணிபுரிந்த இடங்கள் என அவரது நினைவுத் தடங்கள் பதிந்த அனைத்தையும் இந்நூலில் ஆவணப்படுத்தியிருக்கிறார். சுமார் 50 ஆண்டுக்காலமாக அவரைச் சுற்றி  இடம்பெற்ற நிகழ்வுகளின் புகைப்படங்கள் குறிப்புகளுடன் நேர்த்தியாகப் பதிவுசெய்திருக்கிறார். இலங்கையின் பாராளுமன்றம், மாகாணசபை, அரசியல் நிலைமைகளையும் வடக்கு-கிழக்கு மாகாணசபை தொடர்பாக பல அரிய தகவல்களையும் இந்நூலில் பொதிந்துவைக்கத் தவறவில்லை. நொக்ஸ் மரம் பற்றிய விளக்கம், பிறந்த மண், அக்கரைச் சேனையின் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தோற்றமும் கேணிக்காட்டில் ஒரு பள்ளிக்கூடத்தின் உதயமும், கேணிக்காட்டுப் பாடசாலை-வரலாற்றுக் குறிப்பு, அரசாங்கப் பாடசாலையாக அதன் வளர்ச்சி, அல்-ஹிலால் அதிபர்கள் பட்டியல், கேணிக்காடு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை, தி/மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரி-ஒரு வரலாற்றுக் குறிப்பு, எம்மை வளர்த்த ஆசான்கள், அல்-ஹிலாலின் பழைய மாணவர்கள், மர்ஹ{ம் நெ.முகம்மது காசிம், மர்ஹ{மா கா.ஆமினா உம்மா, மூதூர் மத்திய கல்லூரி-ஒரு வரலாற்றுக் குறிப்பு, மூதூர் முஸ்லிம்களின் உயர் கல்வி ஒரு நோக்கு, பேராதனைப் பல்கலைக்கழகம்- வரலாறு, மூதூரின் மூத்த உலமாக்களும் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியும், மூதூர்ப் பிரதேசப் பாடசாலைகளில் 1966களில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்களும், உதவி ஆசிரியர்களும், மர்ஹீம் எம்.ஐ.எம்.நளீம் ஹாஜியார், மூதூர் பிரதேச சபையும் அதன் தலைவர்களும், மூதூர் கல்வி வட்டாரத்தின் கல்வி அதிகாரிகள், மூதூர் பிரதேச செயலகமும் அங்கு கடமையாற்றிய அதிகாரிகளும், கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் – இலங்கையின் முதலாவது முஸ்லிம் சிவில் சேவையாளர், திருக்கோணமலைக் கச்சேரியும் அங்கு பணியாற்றிய அரசாங்க அதிபர்களும், வடக்குக் கிழக்கு மாகாணசபை-ஓர் அறிமுகம், கிழக்கு மாகாணசபை- ஓர் அறிமுகம், இலங்கையின் பாராளுமன்றம்- ஓர் அறிமுகம், திருக்கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்- ஓர் அறிமுகம், இலங்கையின் பிரதம மந்திரிகள்- ஓர் அறிமுகம், இலங்கையின் ஜனாதிபதிகள்- ஓர் அறிமுகம், நான் கண்ட காத்தான்குடி, வாழ்த்துரைகள் சில ஆகிய விடயங்களை 40 அத்தியாயங்களுக்குள் உள்ளடக்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Slot Barcrest

Articles Permit From Barcrest Similar Game: Happy to Gamble 7s Burning The real deal? BetZone Gambling establishment also offers United kingdom players weekly bonuses and