16970 பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம் பாகம் 3: மீசாலை.

செல்லையா யோகரத்தினம் (தொகுப்பாசிரியர்). கனடா: ஆதவன் வெளியீட்டகம், 771, பிரிம்லி வீதி, ஸ்காபரோ, ஒன்ராரியோ M1J  1C7, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை)

xiv, 393 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 750., இந்திய ரூபா 300., அளவு: 24×19  சமீ.

மீசாலை யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊராகும். இவ்வூரின் வடக்கு எல்லையில் சரசாலை, மந்துவில் ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் அல்லாரையும், தெற்கில் சங்கத்தானையும், மேற்கில் மட்டுவில், சரசாலை, கல்வயல் ஆகிய ஊர்களும் உள்ளன. கனடாவில் வாழ்ந்த அமரர் அ.பொ.செல்லையா அவர்களால் சேகரிக்கப்பட்ட மீசாலைக்கிராமம் பற்றிய பல்வேறு தகவல்களையும் அவரது மறைவின் பின்னர் துணைவியார் செல்லையா யோகரத்தினம் அவர்கள் தொகுத்துப் பதிவுசெய்து பிரதேச வரலாற்றாவணமாகத் தந்துள்ளார். எம்முடைய பொற்காலம், கோவில்கள், பாடசாலைகள், ஆதிகாலம், தமிழரசர் காலம், போர்த்துக்கேயர் (பறங்கியர்) காலம், ஒல்லாந்தர் காலம், ஆங்கிலேயர் காலம், ஈழவிடுதலைப் போராட்ட காலம், எமது எதிர்காலம், வழக்காறுகள் ஆகிய 11 அங்கங்களில் இந்நூலிலுள்ள 70 ஆக்கங்களும் பிரித்துத் தரப்பட்டுள்ளன. பின்னிணைப்பாக மீசாலையில் சூரிய வம்சத்தினர், கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் சரிப்பட்டு வருமா? ஆகிய இரு ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. 237ஆம் பக்கத்திலிருந்து 393ஆம் பக்கம் வரை இந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு “English Version of the Naan Kanda Meesalai Sweet Memories of Mrs. Chelliah Yogaratnam” என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

Cómo Generar Algún Página web

Content Paypal Para Desmesurados Compañias ¿lo que Resulta una Redirección De Plana Www O Url? Términos Sobre Trato Así­ como Diferentes Políticas Nunca Habías Analizado En