16971 மட்டுநகரின் இன்னுமொரு பக்கம்: தகவல் ஆவணக் கட்டுரைகள்.

 அரங்கம் இரா. தவராஜா. மட்டக்களப்பு:  ஆரூஷ்கர் பதிப்பகம், இல. 60, லொயிட்ஸ் அவென்யூ, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (மட்டக்களப்பு: ஷெரோனி அச்சகமும் வெளியீட்டாளரும் 101 A, புதிய எல்லை வீதி).

84 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-96509-0-9.

மட்டக்களப்பில் மிக நீண்ட காலமாக இலக்கியம் கலை எழுத்துத்துறையில் ஈடுபட்டு, பல நூல்களையும் கட்டுரைகளையும் “அரங்கம்” எனும் சஞ்சிகை மூலமாகத் தனது எழுத்து ஆக்கங்களையும் தனது முயற்சியினால் மட்டக்களப்பி;ல் வெளியிட்டுவந்தவர் கலாபூசணம் அரங்கம் இரா.தவராஜா அவர்கள். கலை இலக்கியத் துறையிலும் ஈடுபாடுடைய இவர் மட்டக்களப்பில் 1950 ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்பு எவ்வாறு இருந்துள்ளது என்பதை அக்காலங்களில் காணப்பட்ட மக்களின் வாழ்க்கை முறைகள், அந்த மக்களின் தேவை என்ன என்பது தொடர்பான விடயங்களை எல்லாம் இந்த நூல்வழியாக இன்றைய தலைமுறையினருக்கு பிரதிபலித்துக் காட்டுகின்றார். ஒரு வகையில் காலக் கண்னாடியாக இந் நூல் அமைந்துள்ளது. மட்டக்களப்பு மக்களுக்காகப் பாடுபட்ட பாதர் (Father) வெபர், ஓவியங்களும் ஓவியர்களும் (ஜனாப் எம்.ஏ.அஸீஸ் உள்ளிட்ட மண்ணின் மைந்தர்கள் பற்றி), மட்டுநகரில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சி, கிழக்கில் வீசிய சூறாவளி எனப் பல்வேறு விடயங்கள் இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Bônus Exclusivo e Jogos

Jackpot City Casino é um casino online estribado sobre 1998, executando a plataforma de jogos Microgaming. É operado pela Digimedia Ltd como registrado debaixode a jurisdição