16973 யாழ்ப்பாணம் பாரீர்.

செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 75/10A, பிரவுண் வீதி, நீராவியடி, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).

viii, 84 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-1624-12-5.

யாழ்ப்பாணம் பற்றிய பல்வேறு தகவல்களை இந்நூலில் தொகுத்து வழங்கியிருக்கிறார். யாழ்ப்பாணம் பற்றிய வரலாற்று அறிமுகத்துடன் தொடங்கும் இந்நூலில் யாழ்ப்பாண தேசத்தின் தோற்றம், யாழ்ப்பாண வளைவு, யாழ்ப்பாணக் கோட்டை, பொதுசன நூல் நிலையம், துரையப்பா விளையாட்டரங்கு, முற்றவெளி றீகல் தியேட்டர், நினைவுக் கற்கள், வீரசிங்கம் மண்டபம், முற்றவெளி முனியப்பர் கோயில், தபாற் கந்தோர், பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம், மணிக்கூட்டுக் கோபுரம், செல்வா நினைவுக்கோபுரம், பழைய மாநகர சபைக் கட்டடம், கங்காசத்திரம், சொக்கட்டான் சந்தைகள், நவீன சந்தைகளும் ஏனையனவும், யாழ்ப்பாணம் கச்சேரி, யாழ்ப்பாணம் கச்சேரி குடுக்காய் மரம், குருநகர்த் தண்ணீர்த் தாங்கி, நல்லூர்க் கந்தசுவாமி பெருங் கோயில், நல்லூர்ச் சுற்றுக் கோயில்கள், நல்லூர்ப் பூதத்தம்பி வளைவு, நல்லூர் மந்திரி மனை, யமுனா ஏரி, யாழ்ப்பாண நுண்காட்சியகம், வில்லூன்றி, யாழ்ப்பாண வீதித் தர்மம், தெரு மூடிமடம், சங்கடப் படலை, கைதடி பனை அபிவிருத்திச்சபை, கைதடி சாந்தி நிலையம், தெருவோரத் தெய்வங்கள், வல்லை முனியப்பர், சுட்டிபுரம் அம்மன் கோவில், மணல் காடு, புனித அந்தோணியார் தேவாலயம், வல்லிபுரக் கோயில், பல்கிளைப் பனைமரம், வெளிச்ச வீடு, மயிலியதனைக் கிடங்கு, நிலாவரைக் கிணறு, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், கீரிமலை, நகுலேஸ்வரம், சன்னதி முருகன் கோயில், தொண்டைமானாறு, கிறிஸ்தவ தேவாலயங்கள், கந்தரோடை வரலாற்று எச்சங்கள், துர்க்கையம்மன் கோயில், வழுக்கியாறு, பறாளை விநாயகர், களைத்தோடிக் கண்ணகை, மானிப்பாய் இடிகுண்டு, காரைநகர் சிவன் கோயிலும் கசூர்னா கடற்கரையும், காரைநகர் கடற்கோட்டை, ஊருண்டி துறைமுகம் கோட்டை (ஜரில்), நயினை நாகபூஷணி அம்மன் கோயில், நயினாதீவு நாகவிகாரை, அனலைதீவு ஐயனார் கோயில், அனலைதீவு நாகேஸ்வரர், நெடுந்தீவு போர்த்துகேயர் கோட்டை, நெடுந்தீவு பாவோபாப் மரம், நெடுந்தீவு குயிண்டாக் கோபுரம், நெடுந்தீவு (குதிரைகள்) காட்டுக் குதிரைகள், நெடுந்தீவு சாராப்பிட்டி ஆகிய தலைப்புகளில் பிரதேச வரலாற்றுக் குறிப்புகள் புகைப்படங்களுடன் சிறு கட்டுரைகளாகத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24126).

ஏனைய பதிவுகள்

Top 20 Cazinouri Ce Mize Mici

Content Sunt Toate Jocurile Să Spre Desktop Valabile Și Deasupra Meşteşu Volant? Dacă Să Joci Blackjack Online Deasupra România Când Bani Reali Noi Cazinouri 2024