16975 வரலாற்று உலா.

ஆ.சி.நடராசா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சிவத்தமிழ் மானிட விடியற் கழகம், 1வது பதிப்பு, 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(4), 116 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

இந்நூலில் பேராசிரியர் பரமு புஷ்பரத்தினம் எழுதிய, யாழ்ப்பாணத்தின் தொல்மரபுரிமைச் சின்னங்கள்: சில குறிப்புகள், “ஆனைக்கோட்டை” யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது பூர்வீக குடியிருப்பு மையம், வலிகாமம் – யாழ்ப்பாணத்தின் தொடக்ககால வரலாற்று மையங்கள், யாழ்ப்பாணக் கோட்டைக்குள் புராதன இந்து ஆலயங்களின் அழிபாடுகள் கண்டுபிடிப்பு, வேலணை சாட்டியில் பெருங்கற்காலப் பண்பாடு, நெடுந்தீவில் சுற்றுலாவுக்குரிய தொல்லியற் சின்னங்கள் ஆகிய கட்டுரைகளும்,  திருமதி சாந்தினி அருளானந்தம் எழுதிய, தமிழரது பண்பாடு பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் நல்லூர்க் கந்தன் ஆலயம், நல்லூர் நாற்றிசைக்கோயில்கள் – தமிழரின் இராசதானியை நினைவுபடுத்தும் சின்னங்கள் ஆகிய கட்டுரைகளும், சசிதா குமாரதேவன் எழுதிய, ஜமுனா ஏரி – யாழ்ப்பாண அரசுகால நினைவுச்சின்னம், மந்திரிமனை – யாழ்ப்பாண அரசின் ஓர் நினைவுச்சின்னம், நல்லூர் இராசதானியின் நினைவுச் சின்னமாக கோப்பாயில் அமைந்திருந்த சங்கிலியன் கோட்டை, இயற்றாலையில் அழிவுண்டு காணப்படும் சங்கிலி மன்னன் காலக்கோட்டை, சுண்டிக்குளம் – மறக்கப்பட்டு வரும் ஒரு புராதன தொல்லியற் சுற்றுலா மையம், நல்லூர் இராசதானிக் காலத்தை நினைவுபடுத்தும் சங்கிலியன் தோப்பு, வரலாற்று நோக்கில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், யாழ்ப்பாணத்தில் அரச மரபு தோன்றி வளர்ந்த வரலாற்றைக் கலைவடிவமாகக் கூறும் நகுலேஸ்வரர் ஆலயம் ஆகிய கட்டுரைகளும்,  ரேணுகா சின்னராஜா எழுதிய கந்தரோடை – புராதன தொல்லியல் மையங்களுள் ஒன்று, யாழ்ப்பாணத்தில் பூர்வீக மக்கள் பயன்படுத்திய சுடுமண் கிணறுகள், ஐரோப்பியரது நினைவுச் சின்னங்களுள் ஒன்றாக அமைந்துள்ள ஊர்காவற்றுறைக் கோட்டை, வரலாற்று சுற்றுலாவிற்கான முக்கிய தொல்லியல் மையம் வல்லிபுரம் ஆகிய கட்டுரைகளும், அன்பரசி இரட்ணசிங்கம் எழுதிய,  கச்சாய் துறைமுகம் வெளிச்சத்திற்கு வராத ஒரு தொல்லியல் மையம், யாழ்ப்பாண நகரின் தென்புறத்தில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டை ஆகிய கட்டுரைகளும், கர்ணிகா பாஸ்கர ஐயர் எழுதிய யாழ் கோட்டை முனியப்பர் ஆலயம் என்ற கட்டுரையும் உள்ளடக்கிய 23 கட்டுரைகளைக் கொண்டது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70947).

ஏனைய பதிவுகள்

Handy Zahlung Casinos

Content Kann Ich In Casinos Mit Der Paysafecard Bezahlen Ohne Registrierung? Bestenliste Jeton Casinos In Der Schweiz 2024 Bezahlen Mit Dem Mobiltelefon In Einem Online