16976 கலங்கரை விளக்கம்.

மலர்க் குழு. ஐக்கிய இராச்சியம்: வி.சு.சாந்தமூர்த்தி, செயலாளர், நெடுந்தீவு ஒன்றியம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2006. (லண்டன்: பிரின்ட் டோன் அச்சகம்).

60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

ஐக்கிய இராச்சியத்தில் இயங்கிவரும் நெடுந்தீவு ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல் வெம்பிளி, புனித மைக்கல் தேவாலய மண்டபத்தில் 21.10.2006 அன்று இடம்பெற்ற வேளையில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர். வாழ்த்துரைகள், கவிதாமலர்கள், இளையோர் ஆக்கங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றின் மத்தியில் “நெடுந்தீவின் செழுமையைக் குலைத்த ஒல்லாந்தர் ஆட்சி” (வி.சுப்பிரமணியம், வீரகேசரி 13.3.1994) என்ற கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்