16978 ஈழத்தின் அரங்க அரசியல்: பேராசிரியர் சி.மௌனகுருவை முன்வைத்து.

கி.பார்த்திபராஜா. திருப்பத்தூர் மாவட்டம் 635 851: பரிதி பதிப்பகம், 56சீ, 128, பாரத கோயில் அரகில், ஜோலார்பேட்டை, 1வது பதிப்பு, ஜனவரி 2022. (சென்னை: துர்க்கா பிரின்டர்ஸ்).

76 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 22×15 சமீ.

பேராசிரியர் சி.மௌனகுருவை முன்வைத்து “ஈழத்தின் அரங்க அரசியலை” பேசும் சிறு முயற்சியே இந்நூல். அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈழத்தின் அரங்க அசைவியக்கமாகத் திகழும் பேராசிரியர் மௌனகுரு அவர்களின் கூத்து, நாடகம், கலை இலக்கிய நோக்கு யாவற்றினும் ஊடாகக் குறுக்கும் நெடுக்குமாகப் பயணப்பட்ட தமிழ்நாட்டு இளைய நாடகக் காரனின் குறிப்புகள் இவை. மௌனகுரு அவர்களை அறிவது என்பது ஈழத்து அரங்கப் போக்கின் உயிர்த்துடிப்பு மிக்க பகுதியை அறிவதுமாகும். இதில் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களுடனான ஒரு நேர்காணல், “கூத்த யாத்திரை நான் கொண்டதும் கொடுத்ததும்” என்ற மௌனகுருவின் அரங்கியல் அனுபவம் பற்றிய நூல் குறித்த நூலாசிரியரின் மனப்பதிவுகள், பேராசிரியரின் “அரங்கியல்”  என்னும் நூல் பற்றிய திறனாய்வு ஆகிய மூன்று ஆக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தமிழ்ப் பேராசிரியர்/ நாடகவியலாளரான கி.பார்த்திபராஜா, கலை இலக்கியம் அரசியல் எனப் பல தளங்களில் 40இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தான் பணிபுரியும் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் ”மாற்று நாடக இயக்கம்” என்னும் அமைப்பைத் தோற்றுவித்து நாடகப் பணிகளைச் செய்து வருகிறார்.

ஏனைய பதிவுகள்

10644 வெளிச்சம் காணாத விழிகள்.

பிபிலை நா.ஜெயபாலன். பிபிலை: நா.ஜெயபாலன், இல.14, தும்பல் ஏறுவ, வேகம, 1வது பதிப்பு, 2013. (மட்டக்களப்பு: வனசிங்கா பிரிண்டர்ஸ், திருமலை வீதி). ii, 121 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.

16307 மொழி மணிகள்.

எஸ்.எம்.ஜீவா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: அன்னை புத்தகசாலை, இல. 7, நவீன சந்தை, ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: சத்தியா பிரின்டர்ஸ், 153/11, நாவலர் வீதி). iv, 76 பக்கம், விலை: ரூபா