தெ.திருஞானமூர்த்தி. புதுக்கோட்டை மாவட்டம்: தனலட்சுமி வெளியீடு, 125/100, தாயகம், தேனப்பர் வீதி, மேலைச் சிவபுரி 622 403, 1வது பதிப்பு, டிசம்பர் 2000. (சிவகாசி 626123: சூரியா பிரின்ட் சொலூஷன்ஸ், 15ஃ2, பி.எஸ்.ஆர். சாலை).
112 பக்கம், விலை: இந்திய ரூபா 50.00, அளவு: 22×14 சமீ.
இந்நூல் ஈழத்து நவீன கவிஞர்கள், விடுதலைக்கவி காசி ஆனந்தன், வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதைகளில் கூட்டுக் குரல், எரியும் ஈழத்தில் கண்ணீரும் கனலுமாய்ச் சேரன் கவிதைகள், புரட்சிக் கவிஞர் புதுவை இரத்தினதுரை, ஈழத்துப் பெண் கவிஞர்கள், புகலிடக் கவிதைகளும் ஈழத் தமிழர்களும் ஆகிய ஏழு இயல்களில் எழுதப்பட்டுள்ளது. சமகால ஈழத்துத் தமிழ்க் கவிஞர்கள் சமூகப் பிரக்ஞை நிலையிலும், உலக நோக்கிலும் பல திறப்பட்டு நிற்கின்றனர். அத்தகைய கவிஞர்களுள் மஹாகவி முதல் சோலைக்கிளி ஈறாகவுள்ள இருபதுக்கு மேற்பட்ட கவிஞர்களின் படைப்புகளினூடாகப் பயணித்து அவர்தம் கவிதைகளில் புதைந்து கிடக்கும் பொருளாழத்தையும் நடைச் சிறப்பையும் தனித்துவத்தையும் நூலாசிரியர் இனம்கண்டு காட்டியிருக்கிறார். தமிழகத்துக்கு அயலகத் தமிழ்க் கவிதைப் போக்கை ஆழ்ந்த அக்கறையுடன் அறிமுகப்படுத்துவதன் மூலம் எரிந்துகொண்டிருக்கும் ஈழக்களத்தில் எழுந்த கவிதைகளைத் தம் ஆய்வுக் கண்களால் அணுகிப் பார்த்திருக்கிறார். நூலாசிரியர் முனைவர் தெ.திருஞானமூர்த்தி, மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியின் இணைப்பேராசிரியராவார்.