கி.பார்த்திபராஜா (தொகுப்பாசிரியர்). திருப்பத்தூர் மாவட்டம் 635 851: பரிதி பதிப்பகம், 56சீ, 128, பாரத கோயில் அரகில், ஜோலார்பேட்டை, 1வது பதிப்பு, ஜனவரி 2022. (சென்னை: துர்க்கா பிரின்டர்ஸ்).
68 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 22×15 சமீ.
பேராசிரியர் சி.மௌனகுரு ஈழத்து நாடக இயக்கத்தின் மிக முக்கியமான அசைவியக்கம். கூத்து, நாடகம், ஆய்வு, உரையாடல் எனத் தொடர்ந்து இயங்கிவரும் பேராசிரியரைக் குறித்த எழுத்தாக்களைத் தொகுத்து நோக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியே இத்தொகுப்பு நூல். கா.சிவத்தம்பி அவர்களின் “1950 முதல் நடந்தேறியுள்ள ஈழத்துத் தமிழ் அரங்கின் வரலாற்றுப் பெருமை மிக்க வளர்ச்சியும் அந்த வரலாற்றில் மௌனகுருவுக்குள்ள இடமும்” என்ற கட்டுரையும், சமுத்திரன் என்னும் புனைபெயரில் பேராசிரியர் சண்முகரத்தினம் எழுதிய ‘மௌனகுருவின் கூத்த யாத்திரை கொண்டதும் கொடுத்ததும் நூல் விமர்சனம்” என்ற விமர்சனக் கட்டுரையும் முனைவர் ஞா. கோபி அவர்கள் நெறிப்படுத்திய மௌனகுரு அவர்களின் நேர்காணலும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கூத்து நாடகம், அரங்கம், மீளுருவாக்கம் ஆகிய வெளிகளில் பயணப்படும் இவ்வெழுத்தாக்கங்கள் மிகவும் கனதி மிக்கவை.