16987 நோபல்பரிசுபெற்ற இயற்பியலறிஞர்கள் – 01 (1901-1910).

நா.சு.சிதம்பரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street). 

80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 280., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-685-081-3.

இந்நூலாசிரியர் ஓய்வுபெற்ற இயற்பியல் ஆசிரியர். வட சென்னையில் டாக்டர் குருசாமி முதலியார் தொ.து.வே. மேல்நிலைப்பள்ளியில் 22 ஆண்டுகளாக அறிவியல், இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். “அறிவியல் ஒளி” இதழில் அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவற்றிலிருந்து நோபல் பரிசுபெற்ற அறிஞர்களின் வரலாற்றை 14 தொகுதிகளில் இலங்கையில் வெளியிட்டுள்ளார். இத் தொகுதியில் வில்ஹெல்ம் கார்னாட் ராண்ட்ஜன், ஹென்ட்ரிக் ஆன்டூன் லாரன்ட்ஸ், பைடர் சீமன், ஆன்டாய்ன் ஹென்றி பெக்குரல்,  மரியா ஸ்க்வோடோன்ஸ்கி என்ற மேரி கியூரி, பியர் கியூரி, ஜான் ஸ்ட்ரட்- 3வது பரன் ராலே, பிலிப் எட்வர்ட் ஆன்டன் லெனார்ட், ஜோசப் ஜான் தாம்சன், ஆல்பர்ட் அப்ரஹாம் மைக்கல்சன், கேப்ரியல் லிப்மன், குஸ்ஸெல்மோ மார்க்கோனி, கார்ல் பெர்டினான்ட் பிரவுன், ஜோகன்ஸ் டிடெரிக் வான்டெர்வால்ஸ் ஆகிய 14 அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70207).

ஏனைய பதிவுகள்