லிங்கேசியா கெங்காதரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2024, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
x, 149 பக்கம், விலை: ரூபா 1100., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-646-5.
இன்று நாம் கண்ட நவீன மாற்றங்கள் எல்லாவற்றிற்கும் பல்வேறுபட்ட காலங்களில் பல்வேறுபட்ட துறைசார் வல்லுநர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளே அடிப்படைக் காரணமாகும். கல்வி மற்றும் கல்விசாரா அனைத்து துறையினருக்கும் அவசியமான ஒன்றாக அமைவது ஆய்வு. பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமன்றி அனைத்து பிரிவினரும் ஆய்வு தொடர்பான முக்கியமான விடயங்களை எமது தாய்மொழியில் புரிந்துகொள்வதற்கு ஏற்றவகையில் ‘ஆய்வு முறையியல்’ எனும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஆய்வு அறிமுகம், ஆய்வுத் தலைப்பினை உருவாக்குதலும் தெளிவுபடுத்துதலும், இலக்கிய மீளாய்வு, கருதுகோள்களின் உருவாக்கம், ஆய்வு அணுகுமுறைகளை புரிந்துகொள்ளல், ஆய்வு வடிவமைப்பை உருவாக்குதல், மாதிரியெடுத்தல், தரவு சேகரிப்பதற்கும் பகுப்பாய்வு செய்வதற்குமான முறைகள், ஆய்வு முன்மொழிவினைத் தயாரித்தல், ஆய்வு மூலங்களுக்கு அங்கீகாரம் அளித்தல் ஆகிய 10 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பேராசிரியர் லிங்கேசியா கெங்காதரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீடத்தின் நிதி முகாமைத்துவத் துறையினுடைய தலைவராகப் பணியாற்றுகின்றார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தனது இளமாணிப் பட்டத்தினையும் பேராதனைப் பல்கலைக்கழகம், லண்டன் -கிங்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டப்பின் மேற்படிப்பகளையும் பூர்த்தி செய்துள்ளார்.