சி.மௌனகுரு (மூலம்), மா.கருணாநிதி (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: பேராசிரியர் சோ.சந்திரசேகரம் ஞாபகார்த்த மன்றம், இல. 7, அலெக்சாந்திரா டெரஸ், 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
06.04.2024 அன்று நிகழ்த்தப்பட்ட வித்தியாநிதி பேராசிரியர் சோ.சந்திரசேகரம் இரண்டாவது நினைவுப் பேருரை. பேராசிரியர் சி.மௌனகுரு தனதுரையில் நான்கு கதைகளின் மூலம் வரலாற்று பண்பாட்டு ஆய்வுகளை மேற்கொள்ளும் முறை பற்றி எளிமையாகத் தெளிவுபடுத்துகின்றார். ‘ஒரு முட்டாள் கணவனும் அவனுக்கு வாய்த்த புத்திசாலி மனைவியும்’ (இது தொலைத்த இடத்தில் தேடாமல் தமக்கு வசதியான இடத்தில் தான் தொலைத்த பொருளைத் தேடும் கணவன் பற்றியது), ‘இறந்த தம் மூதாதையருடன் இயல்பாகப் பேசும் மக்கள்’ (மட்டக்களப்பு கழுவன்கேணி பிரதேசத்து பழங்குடிகளிடையே காணப்படும் ஒரு சடங்கு முறை), ‘இது உறங்கவிடாத சுடலைமாடன் கதை’ (கண்டிப் பிரதேசத்தின் கந்த கெட்டிய என்ற தேயிலைத் தோட்ட மலையின் பின்னணியில் சொல்லப்பட்ட கதை), ‘ஒரு சிறு இனக்குழுமம் தன்னை நிலைநிறுத்தி தனித்துவம் பெற்று மேலெழுந்த கதை’ (மட்டக்களப்பு புன்னைச்சோலை காளிகோவில் பின்னணியில் பெற்ற அனுபவம்) என நான்கு கதைகளின் மூலம் வரலாறும் வரலாறு எழுதியலும் பற்றி பேராசிரியர் மௌனகுரு எளிமையாக விளக்கியிருக்கின்றார்.