17010 நூல்தேட்டம் தொகுதி  17.

என்.செல்வராஜா. ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், இணை வெளியீட்டாளர், கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xviii, 600 பக்கம், விலை: ரூபா 6000., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-6164-70-6.

தாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்பட்ட ஈழத்துத் தமிழ் நூல்களுக்கான குறிப்புரையுடன் வெளிவந்துள்ள நூல்விபரப்பட்டியலின் பதினேழாவது தொகுதி இதுவாகும். இத்தொகுதியில் மேலும் 1000 நூல்களுக்கான பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. பிரதான பதிவு தூவி தசாம்சப் பகுப்புமுறையைத் தழுவிப் பகுப்பாக்கம் செய்யப்பட்டு, பாடவாரியாகப்; பதியப்பட்டுள்ளது. பதிவுகள் 16001-17000 வரை தொடர் இலக்கமிடப்பட்டுள்ளன. நூல் தலைப்பு வழிகாட்டி, ஆசிரியர் வழிகாட்டி என்பவற்றுடன் இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் படைப்புக்களும் பட்டியலிட்டுத் தரப்பட்டுள்ளமை இந்நூலின் சிறப்பம்சமாகும்.

ஏனைய பதிவுகள்

5 Euro Bonus Ohne Einzahlung Casino

Content MR BET AT Überprüfungscode – Gewinn Auszahlung Von 50 Euro Bonus Ohne Einzahlung Im Casino Casino No Deposit Bonus Im Juni 2024 Online Casino

14761 கானல் தேசம்.

நொயல் நடேசன் (இயற்பெயர்: என்.எஸ்.நடேசன்). நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (சென்னை: 600077: மணி ஓப்செட்). 399 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21×14