17012 யாழ்ப்பாணத் தமிழியல் ஆய்வடங்கல்: தேர்ந்த நூல்விபரப் பட்டியல்.

 கணேசஐயர் சௌந்தரராஜன். யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் அலகு, கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், 1வது பதிப்பு, டிசம்பர் 2023. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

xxv, 473 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×18.5 சமீ., ISBN: 978-624-5911-23-3.

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தை மையப்படுத்தி, இப்பிரதசத்தில் உருவாக்கம்பெற்ற ஆக்கங்களின் பதிவுகளையும் பிரதேசத்தைப் பற்றிய பல்வேறு ஆக்கங்களின் பதிவுகளையும்  கொண்டதாக இந்நூல்விபரப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் பிறந்தவராக, திருமணத் தொடர்புள்ளவராக, அமையும் படைப்பாளிகளின் ஆக்கங்கள் (புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் உள்ளிட்ட), இப்பிரதேச வெளியீட்டாளர்களின் நூல்கள், தொகுப்பு முயற்சிகள் என விரிவானதொரு தளத்தில் நின்று இந்நூல்விபரப் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பாக்கத்தின் பிரதானமான இரு பெரும் பிரிவுகளாக, நூலியல் தரவுகள் கொண்ட பிரதான பகுதி, ஆசிரியர் பெயர் வழிகாட்டி அட்டவணை ஆகியவை அமைகின்றன. அனலைதீவு திரு.கணேசஐயர் சௌந்தரராஜனின் நூலக வாழ்வு 34 ஆண்டு உள்ளூராட்சி சேவையிலும், ஓய்வின் பின்னரான எஞ்சிய காலம் இன்றுவரை சமூகமயப்படுத்தப்பட்ட நூலக, நூலியல் சேவைகளிலும் கழிகின்றது. இலங்கை உள்ளூராட்சி சேவையில் 34 வருடங்கள் நூலகப் பணியாற்றி 18.02.2013 இல் சேவையிலிருந்து இளைப்பாறியவர் திரு. சௌந்தரராஜன்;. தற்பொழுது அளவெட்டி கும்பளாவளைப் பிள்ளையார் கோயிலடியை வசிப்பிடமாகக் கொண்டு தன் ஓய்வுகாலத்தை பயனுள்ள வகையில் கழித்து வருகிறார்.

ஏனைய பதிவுகள்

Koningskroon Bank Review: Plausibel en Buiten CRUKS?

Inhoud Rechtstreeks dealers gedurende de acteren va Blackjac Inherent ondervinding Koningskroon Bank Krans Gokhal welkomstbonus Beschikbare lezen Koningskroon Gokhal legitiem wegens Nederlan? KroonCasino vogueplay.com map