அ.ஸ்ரீகாந்தலட்சுமி. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 2வது பதிப்பு 2017, 1வது பதிப்பு 2010. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).
xviii, 242 பக்கம், விலை: ரூபா 1600., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-1857-84-4.
தமிழில் சொற்பொருளாய்வுக் களஞ்சியங்களின் (Thesaurus) ஆரம்ப கட்டமாக நிகண்டுகளைக் குறிப்பிடலாம். ஒத்த பொருளுள்ள சொற்களை பட்டியலிடும் முயற்சியே நிகண்டுகளின் பின்னணியாகும். இதிலிருந்து சற்று விரிவானதாக தெசாரஸ் எனப்படும் சொற்பொருளாய்வுக் களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு பொருளின் ஒத்த கருத்துள்ள சொற்களை மட்டுமின்றி அதன் தொகுதி நிலை, பகுதிநிலை, கிடைநிலைத் தொடர்புச் சொற்களையும் ஓரிடத்தில் காட்சிப்படத்தும் முயற்சியாக சொற்பொருளாய்வுக் களஞ்சியங்களின் செயற்பாடு அமைகின்றன. 1991இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மானிய உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு 1992இல் சமர்ப்பிக்கப்பட்ட நூலக தகவல் அறிவியல் சொற்பொருளாய்வுக் களஞ்சிய (தமிழ்-ஆங்கிலம்) செயற்திட்டம் இதுவாகும். கலைச்சொல் அகராதிப் பண்புகள், அகராதிப் பண்புகள், ஆகியவற்றுடன் சொற்களுக்கிடையிலான பலதரப்பட்ட உறவுமுறைகளையும் வெளிப்படுத்துவதாக இவ்வாக்கம் அமைந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12752).