17014 நூலக தகவல் விஞ்ஞானத்தில் சுட்டியாக்கம்.

முஹம்மட் மஜீட் மஸ்றூபா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

xviii, 144 பக்கம், விலை: ரூபா 1650., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-67-6.

சுட்டியாக்கம் என்பது நூலக தகவல் அறிவியலில் மிகவும் சிறப்புவாய்ந்த பகுதிகளில் ஒன்றாகும். இது தகவல் மீளப்பெறுதலின் அனைத்து கோட்பாடுகள், பயன்பாடுகள் மற்றும் நடைமுறைகளை உள்ளடக்கியதும் அவற்றுக்கான அடித்தளமாக இருப்பதுமான ஒரு முன்னணி எண்ணக்கருவாகும்.  இது பாரம்பரிய முறையிலுள்ள தகவல் தொகுதிகளுக்கும் இலத்திரனியல் அல்லது இணையவழி அடிப்படையிலான தகவல் தளங்களுக்கும் மிக அவசியமான ஒரு செயற்பாடாகும். நூலக தகவல் விஞ்ஞானத்தில் சுட்டியாக்கம் எனும் பாடப்பரப்பு பல்வேறு மட்டங்களுக்கும் கற்பிக்கப்படுகின்றது.  சுட்டியாக்கம் பற்றிய இந்நூல் நூலக தகவல் விஞ்ஞானத்தில் இலங்கை நூலகச் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற டிப்ளோமா மற்றும் உயர் தேசிய டிப்ளோமா போன்ற கற்கை நெறிகளைப் பயிலும் மாணவர்களுக்கும் பல்கலைக்கழகங்களில் நூலக தகவல் விஞ்ஞானத்தில் இளமாணி, பட்டப்பின் டிப்ளோமா, முதுமாணி போன்ற பட்டப் படிப்புகளைக் கற்கின்ற மாணவர்களுக்கும் இவ்விடயத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக எழுதப்பட்டுள்ளது. அறிமுகம், சுட்டியாக்க கோட்பாடுகள், சுட்டியாக்க முறைகள், சுட்டித் தொகுதியை மதிப்பிடல், சொற்களஞ்சியம், தேடுதல் தந்திரோபாயங்கள் ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்நூலாசிரியர் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவியாவார். இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட உதவி நூலகராகப் பணியாற்றிவருகின்றார்.

ஏனைய பதிவுகள்

14002 பொது போட்டிப் பரீட்சை வழிகாட்டி(பொது அறிவு பொது உளச்சார்பு -நுண்ணறிவு).

P.சக்திவேல். கொழும்பு 13: பிறைற் புக் சென்டர், இல. 77/24, ஜம்பட்டா வீதி, ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோவில் கிழக்கு வீதி, 1வது பதிப்பு, 1994 (கொழும்பு 11: பிறைற் புக் சென்டர், எஸ்.27, முதலாவது

12637 – மருந்தில்லா மருத்துவம்.

ந.சிவசுப்பிரமணியம் (புனைபெயர்: வாணி). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, ஜனவரி 2018. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம்). xxvi, 140 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14.5 சமீ.,