17017 யாழ்ப்பாணக் கல்லூரி டானியல் பூவர் நூலகம்: யாழ்ப்பாணக் கல்லூரி நூலகம் ஒரு நோக்கு.

கிருபாமலர் உலகராஜா. வட்டுக்கோட்டை: யாழ்ப்பாணக் கல்லூரி நூலகம், 1வது பதிப்பு, 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை).

vi, 32+38 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

ஆசியாவின் முதலாவது பாடசாலை நூலகமாகக் கருதப்படும் யாழ்ப்பாணக் கல்லூரி நூலகம், இன்றைய வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்டதாகும். 1867இல் உருவாக்கப்பட்ட இந்நூலகம், Undergraduate Library என பரவலாக அறியப்பட்டிருந்தது. இக் கல்லூரி நூலகமானது 1958ஆம் ஆண்டில் 25000 நூல்களுடன் காணப்பட்டதாக அறியமுடிகின்றது. சிறிய அறையில் காணப்பட்ட நூலகம் படிப்படியாக விரிவடைந்து, கல்லூரியின் கேர்ணல் ஒல்கொட் ஞாபகார்த்த கட்டிடத்தினை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும் அளவிற்கு விரிவடைந்து சென்றது. யாழ்ப்பாணக் கல்லூரியில் ஜோன் பிக்னெல் அவர்களின் காலம் நூலகத்தின் பொற்காலமாகும். இவர் தனது அரிய நூற்சேகரிப்பை நூலகத்திற்கு வழங்கியதுடன் பல்வேறு அறிஞர்களின் தனிப்பட்ட சேகரிப்புகளையும் நூலகத்திற்குப் பெற்றுக்கொடுப்பதில் முன்நின்று உழைத்தார். பின்னாளில் 1974இல் யாழ்ப்பாணக் கல்லூரி வளாகத்தின் நுழைவாயிலையொட்டி நவீன நூலகக் கட்டிடமொன்றுக்கான அடிக்கல் நாட்டப்பெற்று, 1980இல் அக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ‘டானியல் பூவர் ஞாபகார்த்த நூலகம்’ என்ற பெயரும் அக்கட்டிடத்துக்கு சூட்டப்பட்டது. இக்கல்லூரியின் முதலாவது அதிபரும் கல்லூரியின் வளர்ச்சிக்கு அத்திவாரமாக இருந்தவருமான டாக்டர் டானியல் பூவரின் (27.06 1789 – 03.02.1855)  நினைவாக North Eastern Hill University of India என்ற இந்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ சந்திரன் தேவநேசன் அவர்களால் 31.05.1980 இல் (யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டப்படுவதற்கு சரியாக ஒரு ஆண்டுக்கு முன்னதாக) திறந்து வைக்கப்பட்டது. இந்நூல் யாழ்ப்பாணக் கல்லூரி நூலகத்தைப் பற்றி மேலோட்டமான செய்திகளை கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Better Pair, Wager Measurements??

Posts Points In order to Worth Your Overcard Hand In the Texas holdem Type of Poker Panel Textures Ideas on Continuation Gambling However, overall, extremely