என்.செல்வராஜா. பிரித்தானியா: அயோத்தி நூலக சேவைகள்-பிரித்தானிய கிளை, இணை வெளியீடு, கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xxii, 220 பக்கம், விலை: ரூபா 1750., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-49-2.
யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் அழிப்பினை அதன் வழியாக நிகழ்த்தப்பெற்ற ஒரு கலாச்சாரப் படுகொலையின் அரசியலை, அந்தச் சூழல் பற்றிய விழிப்புணர்வினை, எமது மக்களிடம் நீங்காத நினைவுகளாக வருடாந்த நினைவுகூரல்களின் வழியாக எடுத்துச்செல்வதில் நாமனைவரும் வெற்றிகண்டுவருகின்றோம். இந்த ஆறாவடு நீண்டகாலம் எமது மனங்களில் நிலைகொண்டிருக்கும். இத்தகைய ஆவணத் தொகுப்புகளின் மூலமும் இச்செய்தி அடுத்த சந்ததியினருக்கும் கடத்திச் செல்லப்படும். அவ்வகையில் நூலக எரிப்பின் 20 வருடப் பூர்த்தியையிட்டு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் இந்நூல் 2001இல் முதலில் வெளியிடப்பட்டது. இன்று நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் நூலக எரிப்பு சார்ந்து மேலும் புதுப்புது வரலாற்றுத் தகவல்கள் புதைமணலிலிருந்து வெளிக் கிளம்பி வருகின்றன. இப்பொழுது அதனை எரித்தவர்களின் வாய்மொழிகளாக அவை அதிகம் வெளிவந்தவண்ணமுள்ளன. நூலகத்தை எரித்தவர்கள் தமிழர்களே என்ற வரலாற்றுத் திரிபும் வெற்றிகரமாக அவர்களால் மேடையேற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2001இல் வெளியிடப்பட்ட நூல் மீளவும் இற்றைப்படுத்தப்படவேண்டிய தேவை எழுந்துள்ளது. இப்புதிய நூல் முன்னைய நூலில் காணப்பட்ட தமிழ் ஆவணங்களையும், மேலதிகமாகச் சேகரிக்கப்பட்ட புதிய ஆவணங்களையும் உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. ஈழத்தின் நூலகவியல்துறையிலும் வெளியீட்டுத் துறையிலும் நன்கறியப்பெற்ற நூலியலாளர் என்.செல்வராஜா, ‘நூலகவியல்’, ‘நூல்தேட்டம்’ ஆகியவற்றின் ஆசிரியராகவும், ‘எங்கட புத்தகங்கள்’, ‘அச்சாண்டி’ உள்ளிட்ட பல ஈழத்துச் சஞ்சிகைகளின் ஆலோசகராகவும் இயங்கிவந்துள்ளார். நூல்களை வாசகனுக்கு வழங்குகின்ற அடிப்படைச் செயற்பாட்டுடன் இயங்கும் இவர், சர்வதேச அளவில் பிரித்தானிய டீழழமள யுடிசழயன நிறுவனத்தின் ஆசிய பிராந்தியத்திற்குப் பொறுப்பாகவிருந்து ஆயிரக்கணக்கில் சிறுவர்ஃஇளையோருக்கான ஆங்கில நூல்களைத் தருவித்து இலங்கை முழுவதிலுமுள்ள பாடசாலை, பொது, சனசமூக நிலைய நூலகங்கள் மற்றும் கிராமிய நூலகங்களுக்கு 2006 முதல் அன்பளிப்பாக வழங்கிவருகிறார். நூலக நடவடிக்கைக்கு அப்பால் ஒரு எழுத்தாளராக, எழுத வைப்பவராக, ஒரு வெளியீட்டாளராக, ஒரு விநியோகஸ்தராக, ஊடகங்களில் நூல்களை அறிமுகப்படுத்துபவராக, ஆவணக் காப்பாளராக, வாசகராக, விமர்சகராக ஒரு நூல் உருவாக்கப்பட்டு வாசகனிடம் சேர்க்கப்படும் வரையான அனைத்து செயற்பாட்டிலும் இவர் பங்கேற்றுள்ளார். இது என்.செல்வராஜாவின் 67ஆவது நூலாகும்.
மேலும் பார்க்க:
நூலகாலஜி. 17997