தில்லைநாதன் கோபிநாத். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2022. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
64 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-5881-72-7.
வாய்மொழி வரலாற்றினை விளங்கிக்கொள்ளல், செயற்றிட்டத்தினைத் திட்டமிடுதல், ஆய்வாளரும் பின்புல ஆய்வும், கருவிப் பயன்பாடு, நேர்காணலுக்குத் தயாராகலும் தொடங்கலும், நேர்காணல் அடிப்படைகளும் நுட்பங்களும், மாதிரிக் கேள்விகள், நேர்காணலை நிறைவுசெய்தல், வாய்மொழி வரலாறுகளைப் பயன்படுத்துதல் ஆகிய அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ள இந்நூல், வாய்மொழி வரலாறுகளை எவ்வாறு பதிவு செய்வது என்பது தொடர்பான விரிவான விளக்கத்தினை வழங்குகின்றது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 248ஆவது நூலாக வெளிவந்துள்ளது. புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட தி.கோபிநாத் ஒரு ஆவணமாக்கச் செயற்பாட்டாளராவார். யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர், ஈழத்து ஆவணமாக்கச் செயற்பாடுகளில் 2004 முதல் ஈடுபட்டு வருகின்றார். 2005இல் நூலகம் நிறுவனத்தின் தொடக்கம் முதல் பங்களித்து வரும் இவர், வாழ்க்கை வரலாற்றுக் கலைக்களஞ்சியம், யாழ்ப்பாணப் பத்திரிகைகளையும் ஓலைச் சுவடிகளையும் ஆவணப்படுத்தல் போன்ற செயற்றிட்டங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளார்.