விருபா குமரேசன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xviii, 490 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.
அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினால் (IATR) நடாத்தப்பட்ட ஆராய்ச்சி மாநாடுகளில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை இணையத்தள மொன்றினூடாக ஆவணப்படுத்தலை நோக்கமாகக் கொண்டு விருபா குமரேசன் அவர்கள் தீவிரமாக உழைத்துவந்துள்ளார். இது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம், அதன் உத்தியோகபூர்வ வெளியீடுகளினூடாக வெளிப்படுத்திய தமிழியல் ஆய்வு வரலாற்றினை ஆவணப்படுத்தும் இணையத்தளமாகும். தமிழ் ஆய்வுச் சூழலிற்கு இத்தகைய ஓரிடப்படுத்தப்படும் ஆய்வுகள் அவசியமானது என்பதை நாம் அறிவோம். ஆய்வாளர்களின் நேரத்தை இத்தகைய வழிமுறைகள் மீதப்படுத்தும். திரு குமரேசன் உருவாக்கிய இணையத்தளத்தில் சேகரித்து வந்துள்ள 1870 கட்டுரைகளுக்கான வழிகாட்டியாக இந்தச் சுட்டி (Index) அமைந்துள்ளது. Index of Articles from the Conference Seminars of Tamil Studies of legitimate I.A.T.R. என்ற ஆங்கிலத் தலைப்புடனும் இருமொழி நூலாக இந்நூல் அச்சிடப்பட்டுள்ளது.