செல்வம் (இதழாசிரியர்). கனடா: காலம், 16, Hampstead Court, Markam, Ontario L3R 3S7, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2004. (இந்தியா: பாவனா பிரின்டர்ஸ், சென்னை 79).
84 பக்கம், புகைப்படங்கள், கருத்தோவியங்கள், விலை: இந்திய ரூபா 25.00, அளவு: 27×20 சமீ.
கனடாவிலிருந்து வெளிவரும் காலம் சஞ்சிகையின் (காலம் இதழ் 22, ஓகஸ்ட் 2004).
சிரித்திரன் ஆசிரியர் சிறப்பிதழாக வெளிவந்துள்ள இவ்விதழில் வழமையான இலக்கிய அம்சங்களுடன், சிரித்திரன் சுந்தர் பற்றிய சிறப்புக் கட்டுரைகளாக சிரித்திரனும் சுந்தரும் (செங்கை ஆழியான்), சிரித்திரன்- யாழ்ப்பாணச் சமூகத்தின் கோட்டுச் சித்திரக் குறியீடு (சேரன்), எங்கள் பப்பா-வற்றாத அன்பின் ஊற்று (திருமதி கோகிலம் சிவஞானசுந்தரம்), மனிதருள் ஒரு மாமனிதர் (ராதேயன்), சிந்தனை ஆற்றல் மிகு சிரித்திரன் ஆசிரியர் (அகளங்கன்) ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன.