இதழ் ஆசிரியர் குழு. வாழைச்சேனை: வெளியீட்டுப் பிரிவு, பேத்தாழை பொது நூலகம், கல்குடா வீதி, பேத்தாழை, 1வது பதிபபு, டிசம்பர் 2021. (களுதாவளை: அனாமிகா பிரிண்டர்ஸ்).
xxxiii, 85 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ. ISSN: 2820-2058.
பல்வேறு பிரமுகர்களின் வாழ்த்துச் செய்திகளுடன் வெளிவந்துள்ள இம்மலரில் பேத்தாழை பொது நூலகத்தின் வரலாறும் வளர்ச்சியும் (மலர்க்குழு), வாழி பேத்தாழை பொது நூலகம் (கவிதை-கல்மடு த.கி.ஷர்மிதன்), அமரர் சிதம்பர பரஞ்சோதி அவர்களின் வாழ்வும் பணியும் (மலர்க்குழு), புத்தகம் பற்றிய பொன் மொழிகள் (திருமதி புஷ்பா தயாளன்), அது ஒரு பொற்காலம் (சிறுகதை-தாழை செல்வநாயகம்), நம் அரசியல் தலைமைக்காய் (கவிதை-வாழைச்சேனை எ.த.ஜெயரஞ்சித்), நேர்காணல் (பெண்ணியச் செயறபாட்டாளர் விஜி- நேர்கண்டவர் ஜிஃப்ரி ஹாஸன்), மனிதம் என்ற மகத்துவம் (கவிதை-அம்றிதா ஜெயரஞ்சித்), நூலக வாசகர்களை இளம் விமர்சகர்களாக அடையாளப்படுத்தும் பேத்தாழை பொது நூலகம் (மேமன் கவி), தமிழ்த் தாயின் தவிப்பு (கட்டுரை-நியோமி அனுஷ்திக்கா), கொலசிப்பும் சித்திராவும் (சிறுகதை-எச்.மெத்தியேஸ்), கொக்கரிக்கும் கொரோனாவை கூண்டோடொழிக்க செய்வோமே (கவிதை-முருகவேள் அஷாலினி), பௌர்ணமி தோறும் இலக்கிய வாசம் வீசும் நிலாமுற்றம் (பேத்தாழை நூலகத்தின் முன்றலில் பௌர்ணமி தினங்களில் மாலைவேளையில் அரங்கான நிலாமுற்றம் பற்றிய கட்டுரை-சி.ஜெயரூபன்), உயிர்த்த ஞாயிறு அஸ்தமித்த போது (கவிதை-ஜெ.ஸோ.அத்விஹா), இரண்டு கரைகள் (சிறுகதை-ஜிஃப்ரி ஹாஸன்), குடியால் என்குடி (கவிதை- க.சிவதர்சன்), நூலகமே அவள் உலகம் (சிறுகதை- கல்மடு உ.ரெமிலா), சமூக வலைத்தளங்களுக்குள் வா(மா)ழும் இன்றைய சமூகம் (கட்டுரை-பு.கிருஷாந்த்), காகிதையே (கவிதை- வாழைச்சேனை அரோஸ் சிவதயாழ்), கற்றல் செயற்பாடுகளில் மொழித் திறனின் தாக்கம் (கட்டுரை-திருமதி விஜிதா முருகவேள்), வாசிப்பை நேசிப்போம் (கவிதை-க.டிலக்ஷினி), மட்டக்களப்பில் சஞ்சிகை வளர்ச்சி (ஆய்வுக் கட்டுரை-சிவராசா ஒசாநிதி), கல்வியின் பண்புத்தர விருத்தியில் ஆசிரியர் வாண்மை விருத்தி (கட்டுரை-சின்னத்தம்பி முருகவேள்), நூலகம் தந்த கோமகன் (திரு.சிவநேசதுரை வந்திரகாந்தன் பற்றிய கட்டுரை-எஸ்.ஏ.ஸ்ரீதர்) ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. இச் சிறப்பு மலரின் ஆசிரியர் குழுவில் திரு. மரகதம் பிரகாஷ், திருமதி. தாரணி தங்கத்துரை, திரு. சிவஞானசெல்வரெட்ணம் குகதீசன் ஆகியோர் மணியாற்றியுள்ளனர்.