17025 வெள்ளி மலை இதழ் 17 (2022).

சுதர்சன் ஜெயலக்சுமி (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: சுன்னாகம் பொது நூலகம், வலிகாமம் தெற்கு பிரதேச சபை, 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: அஸ்வின் பிரின்டர்ஸ், இணுவில் மேற்கு, இணுவில்).

vi, 89 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

சுன்னாகம் பொது நூலகத்தின் சஞ்சிகையாக சித்திரை-ஆடி 2007இல் தனது முதலாவது இதழை ஆண்டுக்கு மூன்று இதழ்கள் என்ற ரீதியில் வெளிக்கொணரும் நோக்கில் ஆரம்பத்தில் வெளியிடப்பட்டுவந்த ‘வெள்ளிமலை’ சஞ்சிகை இடையில் வருகை தடைப்பட்டிருந்து மீண்டும் 2017 முதல் ஆண்டு சஞ்சிகையாக வெளிவரத் தொடங்கியது. 2022ஆம் ஆண்டிற்குரிய இவ்விதழில் அன்னை-கவிதை (உடுவில் அரவிந்தன்), சுன்னாகம் சந்தைக் கட்டடம்-சில வரலாற்றுத் தகவல்கள் (இ.மயூரநாதன்), பழைய இலக்கியங்களுள் பொதிந்து கிடக்கும் ஈழக் கவிஞனின் அறிவுத்தேட்டம் (என்.செல்வராஜா), நம் தேசத்தில்-கவிதை (உடுவிலூர் கலா), வீட்டுத் தோட்ட செய்கையில் தென்னை மரமும் மக்களின் வாழ்வாதாரத்தில் அதன் பங்களிப்பும் (சந்திரகுமார் றஜிதா), பெண்ணியம் காப்போம் (ஆ.வாஹினி), டிஜிட்டல் அறிவு மையம் (றொற்றிக் அருட்செல்வம்), சித்தர் சீர்மை-அறிவும் அனுபவமும்- வலி தெற்கின் சில சித்தர் தொடர்பானது (கௌசித்), அறிவார்ந்த சமூக மேம்பாட்டிற்கான வாசிப்பு (மாணிக்கம் தேவகாந்தன்), முப்புலமையும் கைவரப் பெற்ற சுன்னாகம் வாழ் மைந்தன்-சிவத்திரு வ.குமாரசாமி ஐயா (பால திவாகரன்), பார்க்க மறந்த பாதைகள்-சிறுகதை (அருந்ததி சிவகுமாரக் குருக்கள்), அன்பே என்றும் ஆனந்தம் -கவிதை (கு.தயாமினி), மாற்றுத் திறனாளிகளிற்கான நூலக சேவை (ஊர்மிளா), பிராணாயாமம் (ரட்ணலாகி ஜெகநாதன்), நலமுடன் வாழ்வோம் (செல்வி நா.நீலாம்பிகை), நம்மைச் செதுக்கும் வாசிப்பு (பெ.மிருதுளா), வாசிப்பும் நாமும் (றே.கஜாலினி), இளைஞனை விழுங்கும் போதை (கவிதாமலர் சுதேஸ்வரன்), அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு (ச.பானுஷா) ஆகிய 19 படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்