17026 வெள்ளி மலை இதழ் 18 (2023).

சுதர்சன் ஜெயலக்சுமி (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: சுன்னாகம் பொது நூலகம், வலிகாமம் தெற்கு பிரதேச சபை, 1வது பதிப்பு, 2023. (யாழ்ப்பாணம்: அஸ்வின் பிரின்டர்ஸ், இணுவில் மேற்கு, இணுவில்).

iv, 78 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

சுன்னாகம் பொது நூலகத்தின் சஞ்சிகையாக சித்திரை-ஆடி 2007இல் தனது முதலாவது இதழை ஆண்டுக்கு மூன்று இதழ்கள் என்ற ரீதியில் வெளிக்கொணரும் நோக்கில் ஆரம்பத்தில் வெளியிடப்பட்டுவந்த ‘வெள்ளிமலை” சஞ்சிகை இடையில் வருகை தடைப்பட்டிருந்து மீண்டும் 2017 முதல் ஆண்டு சஞ்சிகையாக வெளிவரத் தொடங்கியது. 2023ஆம் ஆண்டிற்குரிய இவ்விதழில் உலகம் வாசிப்பவருக்கே சொந்தம் (அ.சாருஜன்), மாணவர் திறன் விருத்தியில் பாடசாலை நூலக கற்றல் வள நிலையத்தின் பங்கு (மா.தேவகாந்தன்), அக ஒளியில் – கவிதை (இணுவிலான் சிக்காகோ பாஸ்கர்), பெற்றோரே சிந்தியுங்கள் (உடுவிலூர் கலா), நூலகம் பரிபூரணம் – கவிதை (ச.வாகீசன்), சுன்னாகம் மண் தந்த இலக்கியக் களஞ்சியம் கவிஞர் சு.துரைசிங்கம் ஐயா அவர்கள் (பால. திவாகரன்), யாழ்ப்பாண மாவட்ட சனசமூக நிலையங்களும் அவற்றின் நூலக நடவடிக்கைகளும் (என்.செல்வராஜா), இன்றைய வாழ்வில் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளும் பிள்ளைகளின் போக்குகளும் (செல்வி இந்திராதேவி செல்வநாயகம்), சி.வை.தா.வின் பெயர் சொல்லும் பிரான்சிஸ் கிங்ஸ்பரி அழகசுந்தரனார் (கௌ.சித்தாந்தன்), யாழ்ப்பாணப் பண்பாட்டில் வீதியோர மடங்கள் (இ.மயூரநாதன்), ஞாபக உத்திகள் (திருமதி நி.வர்மிளா, மு.சின்னராஜா), சுன்னாகம் பொது நூலக டிஜிட்டல் அறிவு மையம் ஒரு கண்ணோட்டம் (திருமதி இ.துளசி), உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது (செல்வி சி.லதுஜா), யாழ்ப்பாணத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்களில் வலிகாமம் தெற்கு பிரதேசம் சார்ந்த சில பதிவுகள் (சஜீலன்), சிறுதானியங்களும் அவற்றின் பயன்பாடும் (ஜெ.ரத்லஜி), சினத்தைத் தவிர்ப்போம் (செல்வி நா.நீலாம்பிகை) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

14466 ஆயிரம் வேரும் அருமருந்தும்.

கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கம். திருக்கோணமலை: சுதேச வைத்தியத் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2016. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). 250 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: