17027 வெள்ளி மலை இதழ் 19 (2024).

சுதர்சன் ஜெயலக்சுமி (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: சுன்னாகம் பொது நூலகம், வலிகாமம் தெற்கு பிரதேச சபை, 1வது பதிப்பு, 2024. (யாழ்ப்பாணம்: ஜே.ஆர். இன்டஸ்ட்ரீஸ், இல. 7, உடுவில் மகளிர் கல்லூரி மேற்குத் தெரு, உடுவில்).

iv, 74 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISSN: 2989-0063

சுன்னாகம் பொது நூலகத்தின் சஞ்சிகையாக சித்திரை-ஆடி 2007இல் தனது முதலாவது இதழை ஆண்டுக்கு மூன்று இதழ்கள் என்ற ரீதியில் வெளிக்கொணரும் நோக்கில் ஆரம்பத்தில் வெளியிடப்பட்டுவந்த ‘வெள்ளிமலை’ சஞ்சிகை இடையில் வருகை தடைப்பட்டிருந்து மீண்டும் 2017 முதல் ஆண்டு சஞ்சிகையாக வெளிவரத் தொடங்கியது. 2024ஆம் ஆண்டிற்குரிய இவ்விதழில் உலகப் பெருமஞ்சமாம் இணுவைத் திருமஞ்சம் (மா.ந.பரமேஸ்வரன்), வரலாற்றுச் சுவடிகளின் பின்புலத்தில் ‘ஆவணம்’ என்ற சொற்பதம் பற்றிய ஒரு தேடல் (என்.செல்வராஜா), புளகாங்கிதமும் புண்படுதலும் (சி.ஜெகராணி), யாழ்ப்பாணப் பண்பாட்டில் வேலிகள் (இ.மயூரநாதன்), உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே (ச.வாகீசன்), மாருதப்புரவீக வல்லியும் கோயில்களின் உருவாக்கமும் யாழ்ப்பாணத்து அரசமரபின் தோற்றமும் (சண்முகலிங்கம் சஜீலன்), இருபதாம் நூற்றாண்டு இசை முன்னோடிகளில் பாபநாசம் சிவன் (எழிலினி சித்தாந்தன்), இலக்கியத்தின் இலக்கில் நாம் (உடுவிலூர் கலா), ஓவியக்கலை (சி.ச.சு.நேமி), கந்தரோடையும் குடாரை அருள்விநாயகர் நூலகமும் அதன் செயற்பாடுகளும் (நி.வர்மிளா), வாசிப்பு எனும் இதய சிகிச்சை(கவிதாமலர் சுதேஸ்வரன்), ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பிரசுரிப்பதற்கான சரியான பருவ இதழ்களை தெரிவுசெய்தல் (திருமதி தி.ஜனன்), ஆசையின் மயக்கம் (செல்வி நா.நீலாம்பிகை), மாணவர் திறன் விருத்தியில் வாசிப்பின் அவசியம் (மாணிக்கம் தேவகாந்தன்), உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே(செல்வி ஜீ.தர்சிகா) ஆகிய 15 படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

IGT Regal Water

Blogs Majestic Water Demonstration Slot What’s the Come back to User (RTP) in the Gem Sea Pirate Wide range? Bonuses Online game Statistic. Regal Water