கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: சங்கப் பணிமனை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2008. (அச்சக விபரம் தரப்படவில்லை).
44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. இச்சங்கத்தின் திருத்தப்பட்ட அமைப்பு விதிகள் நூலுருவில் வெளியிடப்பட்டுள்ளன. 29.11.2000, 19.05.2006, 17.09.2008 ஆகிய திகதிகளில் நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டங்களின் போது அங்கீகரிக்கப்பட்ட திருத்தங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4710).