கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1956. (கொழும்பு 11: ஸ்டான்கார்ட் பிரின்டர்ஸ் லிமிட்டெட், 196, செட்டியார் தெரு).
8 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
துர்முகி ஆண்டு கார்த்திகைத் திங்கள் 9ம் திகதி சனிக்கிழமை (24.11.1956) மாலை 4:30 மணிக்கு வெள்ளவத்தை சைவ மங்கையர் கழக மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 14ஆவது ஆண்டு மகாசபைக் கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு நிருவாகசபையினர் சமர்ப்பித்த அறிக்கை. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட கணக்கு விபரங்கள் 1.1.1955 தொடக்கம் 31.12.1955 வரையுமுள்ள நிதி வருடத்துக்குரியன. மற்றைய நிகழ்ச்சிகள் 31.10.1956 வரைக்கும் உரியன. இவ்வாண்டுக் காலகட்டத்தில் மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 77 பேரும் சாதாரண உறுப்பினர் 662 பேருமாக மொத்தம் 739 பேர் இணைந்திருந்தனர். இக்காலகட்டத்தில் பொதுச் செயலாளராக திரு. வே.கனகசபாபதி சேவையாற்றியிருந்தார். நூல்நிலைய அதிபராக எப்.எக்ஸ்.சி.நடராசா கடமையாற்றிவந்தார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 5081).