17034 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 26ஆவது ஆண்டுப் பொது அறிக்கை (1967-1968).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1968. (அச்சக விபரம் தரப்படவில்லை).

6 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×13 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 1967-1968 ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 26ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 10.12.1968 அன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 26ஆவது ஆண்டுப் பொதுக்; கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு ஆட்சிக் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கை. இதில் 1967ஆம் ஆண்டு கார்த்திகை 23ஆம் திகதி முதல் 1968 ஆம் ஆண்டு மார்கழி 28ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டுக் காலகட்டத்தில் மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 10 பேரும் சாதாரண உறுப்பினர் 27 பேரும் இவ்வாண்டு புதிதாக இணைந்திருக்கிறார்கள். இதுநாள் வரை மொத்தம் 80 ஆயுள்கால உறுப்பினர்களும் 203  சாதாரண உறுப்பினர்களும் இணைந்திருந்தனர். இக் காலகட்டத்தில் பொதுச் செயலாளராக திரு. ச.சரவணமுத்து சேவையாற்றியிருந்தார்.

ஏனைய பதிவுகள்

Online Baccarat

Posts Ideas on how to Gamble Gambling games 100percent free To the Temple From Online game – rockabilly wolves $5 deposit Preferred 100 percent free