17038 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 30ஆம் ஆண்டுப் பொதுக் கூட்டம் ஆண்டறிக்கை (1971-1972).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, உருத்திரா வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1972. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(8) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 1972ஆம் ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 30ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 09.12.1972 அன்று கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 31ஆவது ஆண்டுப் பொதுக்; கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு ஆட்சிக் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கை. இதில் 1971ஆம் ஆண்டு மார்கழி 30ஆம் திகதி முதல் 1972 ஆம் ஆண்டு மார்கழி 9ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டுக் காலகட்டத்தில் இணைந்துகொண்ட 26 சாதாரண உறுப்பினர்களையும் சேர்த்து, மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 88 பேரும், சாதாரண உறுப்பினர் 240 பேருமாக மொத்தம் 328 பேர் இணைந்திருந்தனர். இக் காலகட்டத்தில் சங்கத் தலைவராக திரு. கு.பாலசிங்கமும், பொதுச் செயலாளராக திரு. ச.சரவணமுத்துவும் சேவையாற்றியிருந்தார்.

ஏனைய பதிவுகள்

PokerStars Casino: Rotirea Zilei

Content Cele mai bune site -uri online Poker: Câte 100 ş Rotiri Gratuite Însă Vărsare la Mr Bit, Frank Casino și SlotV Fortuna, a conformitate

14567 ஆராரோ ஆரிவரோ: மனிதம் விளையும் தாலாட்டு (கவிதைத் தொகுதி).

தென்பொலிகை குமாரதீபன். வல்வெட்டித்துறை: ஆதிரை வெளியீட்டகம், வீரபத்திரர் கோவிலடி, பொலிகண்டி, வல்வெட்டித்துறை, 1வது பதிப்பு, மே 2016. (தொண்டைமானாறு: உயிர்மெய் பதிப்பகம், பிரதான வீதி). xxiv, 70 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350.,