17043 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 35ஆம் ஆண்டு ஆட்சிக்குழுப் பொது அறிக்கை (1976-1977).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: சங்க அகம், கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, உருத்திரா வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1977. (அச்சக விபரம் தரப்படவில்லை).

16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 1976-1977ஆம் ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 35ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்; கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு ஆட்சிக் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கை. இதில் 1976ஆம் ஆண்டு மார்கழி 18ஆம் திகதி முதல் 1977 ஆம் ஆண்டு மார்கழி 18ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டு உறுப்பினர் 164 ஆக இருந்துள்ளனர். இவர்களுள் ஆயுள் உறுப்பினர் 136 பேர். இக் காலகட்டத்தில் தலைவராக மு.வயிரவப்பிள்ளை பணியாற்றியிருந்தார். பொதுச் செயலாளராக திரு. க.கந்தசாமி சேவையாற்றியிருந்தார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 42289).

ஏனைய பதிவுகள்

Free Double Diamond Ports

Posts Happy to Play Multiple Triple Gold The real deal? Da Vinci Diamonds Harbors On the Mobile Exactly what are the Top 100 percent free