17048 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 40ஆவது ஆண்டு ஆட்சிக்குழுப் பொது அறிக்கை (1982).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1982. (அச்சக விபரம் தரப்படவில்லை).

24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 6.12.1981-31.12.1982 ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 40ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்; கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு ஆட்சிக் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கை. இதில் 1981ஆம் ஆண்டு மார்கழி 6ஆம் திகதி முதல் 1982 ஆம் ஆண்டு மார்கழி 31ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இதுநாள் வரை மொத்தம் 192 ஆயுள்கால உறுப்பினர்களும் 61  சாதாரண உறுப்பினர்களும் 10 கௌரவ உறுப்பினர்களும் இணைந்திருந்தனர். இக் காலகட்டத்தில் பொதுச் செயலாளராக திரு. க.கந்தசாமி சேவையாற்றியிருந்தார்.

ஏனைய பதிவுகள்

Book Of Ra 2022

Content Vegas paradise casino review: Avis Sur Les Symboles De Book Of Ra De Conclusie Over Book Of Ra The Book of Ra Deluxe edition