17050 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 42ஆம் ஆண்டுப் பொது அறிக்கை (1984).

 கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1984. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி).

(4), 8 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. இச்சங்கத்தின் 1984ஆம் ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 42ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 10.5.1985 அன்று கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் 43ஆவது ஆண்டுப் பொதுக்; கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு ஆட்சிக் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கை. இதில் 1984ஆம் ஆண்டு தை 01ஆம் திகதி முதல் 1984 ஆம் ஆண்டு மார்கழி 31ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டுக் காலகட்டத்தில் மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 201 பேரும், கௌரவ உறுப்பினர்கள் 16 பேரும், சாதாரண உறுப்பினர் 75 பேருமாக மொத்தம் 292 பேர் இணைந்திருந்தனர். இக் காலகட்டத்தில் பொதுச் செயலாளராக திரு. க.இ.க.கந்தசாமி சேவையாற்றியிருந்தார்.

ஏனைய பதிவுகள்

Slots Gallery

Content Ringa Freespins Som Ett Tillägg Bred Insättning Utländska Casino Free Spins Utan Insättning Slots Äge Lägre Rtp Ännu Somliga Bordsspel Casino Tilläg Inte me