17053 கொழும்புத் தமிழ்ச்சங்கம்: 55ஆவது ஆண்டுக்கான ஆட்சிக்குழுவின் பொது அறிக்கை (1996-1997).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: சங்கப் பணிமனை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, உருத்திரா வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு:  சரசு அச்சகம்).

32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. இச்சங்கத்தின் 1996-1997 ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 55ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் சங்கத்தில் 114 சாதாரண உறுப்பினர்களும் 235 ஆயுள் உறுப்பினர்களும் இணைந்துள்ளனர். இக்காலகட்டத்தில் பொதுச் செயலாளராக திரு. ஆ.பொன்னையா சேவையாற்றியிருந்தார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 5080).

ஏனைய பதிவுகள்

Păcănele Play’n Go Gratis 2024

Content Metode Să Plată Disponibile De Cele Măciucă Bune Casinos Online: Slot space wars Bonus Fara Plată De Ziua Raclă Retrageri Luck Casino 2024 Tipuri