17054 கொழும்புத் தமிழ்ச்சங்கம்: 56ஆவது ஆண்டுப் பொது அறிக்கை (1997-1998).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: சங்கப் பணிமனை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1998. (கொழும்பு 6:  நியூ கார்த்திகேயன் பிரின்டர்ஸ், 501/2, காலி வீதி, வெள்ளவத்தை).

36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. இச்சங்கத்தின் 1997-1998 ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 56ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதில் 1997ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முதல் 1998 ஆம் ஆண்டு ஜ{ன் 28ம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டுக் காலகட்டத்தில் மேற்படி சங்கத்தின் ஆயள் உறுப்பினர்கள் 263 பேரும் சாதாரண உறுப்பினர் 118 பேருமாக மொத்தம் 381 பேர் இணைந்திருந்தனர். இக்காலகட்டத்தில் பொதுச் செயலாளராக திரு. சோ.தேவராஜா சேவையாற்றியிருந்தார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 5105).

ஏனைய பதிவுகள்

16988 நோபல்பரிசுபெற்ற இயற்பியலறிஞர்கள் – 02 (1911-1923).

 நா.சு.சிதம்பரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180ஃ1ஃ48இ புயளறழசம ளுவசநநவ).  80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 260., அளவு:

12401 – சிந்தனை: தொகுதி II (புதிய தொடர்) இதழ் 3 (நவம்பர் 1984).

சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்), சி.முருகவேள் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, நவம்பர் 1984. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை). 179 பக்கம், அட்டவணைகள், விலை: ஆண்டு