17061 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 66ஆவது ஆண்டுப் பொது அறிக்கை (2007-2008).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: சங்கப் பணிமனை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2008. (அச்சக விபரம் தரப்படவில்லை).

32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. இச்சங்கத்தின் 2007-2008 ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 66ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதில் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் திகதி முதல் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டுக் காலகட்டத்தில் மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 467 பேரும் சாதாரண உறுப்பினர் 134 பேருமாக மொத்தம் 601 பேர் இணைந்திருந்தனர். இக்காலகட்டத்தில் பொதுச் செயலாளராக திரு. ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன் சேவையாற்றியிருந்தார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3881).

ஏனைய பதிவுகள்

Casino Online

Content Hur Registrerar Mi Själv På En Online Casino? – Hulk 50 Lines plats Tillfälle Del av Någo Casino Extra Gällande Internet Höstens Bästa Svenska