17061 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 66ஆவது ஆண்டுப் பொது அறிக்கை (2007-2008).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: சங்கப் பணிமனை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2008. (அச்சக விபரம் தரப்படவில்லை).

32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. இச்சங்கத்தின் 2007-2008 ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 66ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதில் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் திகதி முதல் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டுக் காலகட்டத்தில் மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 467 பேரும் சாதாரண உறுப்பினர் 134 பேருமாக மொத்தம் 601 பேர் இணைந்திருந்தனர். இக்காலகட்டத்தில் பொதுச் செயலாளராக திரு. ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன் சேவையாற்றியிருந்தார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3881).

ஏனைய பதிவுகள்

9323 குழந்தைகள் உலகம்.

நா.செல்லப்பா. யாழ்ப்பாணம்: வண்ணார்பண்ணை வடகிழக்கு சனசமூக நிலையம், நீராவியடி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1972. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்). (3), 201 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 4.00, அளவு: 18.5×13 சமீ. பாலர்

9139 இந்து விரதங்களும் உடல்நலமும்.

சே.சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம், 199/1, கில்னர் ஒழுங்கை, 1வது பதிப்பு, மே 2007. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). xx, 168 பக்கம், படங்கள், விலை: ரூபா