17067 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 72ஆவது ஆண்டு அறிக்கை (2013-2014).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).

47 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×20 சமீ.

1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. இச்சங்கத்தின் 2013-2014 ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 72ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு ஆட்சிக் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கை. இதில் 2013ஆம் ஆண்டு மார்கழி 29ஆம் திகதி முதல் 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் 6ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டுக் காலகட்டத்தில் மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 550 பேரும் சாதாரண உறுப்பினர் 108 பேருமாக மொத்தம் 658 பேர் இணைந்திருந்தனர்.

ஏனைய பதிவுகள்

Cash Stampede Slot

Content Stampede Slot: casino Novibet $100 free spins Free Online Slots ECOGRA is the word on responsible gambling and protects players against unfair practices. Join

13A24 – பெருங்காப்பியம் பத்துப் பற்றிய காப்பியச் சொற்பொழிவுகள்.

எஸ்.பொன்னுத்துரை (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: அரசு வெளியீடு, 231 ஆதிருப்பள்ளித் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 1965. (கொழும்பு 13: ரெயின்போ பிரின்டர்ஸ், 231 ஆதிருப்பள்ளித் தெரு). 104 பக்கம், விலை: ரூபா 3.50,