17069 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 74ஆவது ஆண்டு அறிக்கை (2015-2016).

 கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: சங்க அகம், கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, உருத்திரா வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).

55 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×20 சமீ.

1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. இச்சங்கத்தின் 2015-2016 ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 74ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 26.06.2016 அன்று இடம்பெற்ற கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு ஆட்சிக் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கை. இதில் 2015ஆம் ஆண்டு ஜ{ன்; 21ஆம் திகதி முதல் 2016 ஆம் ஆண்டு ஜுன் 20ஆம் திகதி வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டுக் காலகட்டத்தில் மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 633 பேரும் சாதாரண உறுப்பினர் 119 பேருமாக மொத்தம் 752 பேர் இணைந்திருந்தனர்.

ஏனைய பதிவுகள்

22 Best Online casinos

Articles Netent Application Sloto Cash Jeremy Olson Internet casino And you may Video game Specialist Tonybet Local casino Canada Immediately Casino Licence Conditions I believe