ஆட்சிக் குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல. 7, 57வது ஒழுங்கை ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2006. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).
48 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ.
தமிழ் மொழி வளர்ச்சிக்காக 1942ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கொழும்புத் தமிழ்ச் சங்கம் பல்வேறு இரவல் கட்டிடங்களில் இயங்கப்பெற்று, 1957ஆம் ஆண்டு தற்போதுள்ள 57ஆவது ஒழுங்கையில் அமைந்த 42 பேர்ச் நிலத்தை கொள்வனவு செய்ததன் மூலம், சொந்தக் காணியில் குடிபெயர்ந்தது. அதிலிருந்த சிறிய கட்டிடம் சங்கத்தின் தேவைகளுக்கு போதுமானதாக அமையாததால் புதிய கட்டிடமொன்றை உருவாக்க சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.மு.வயிரவப்பிள்ளையும் அவரது ஆட்சிக்குழு உறுப்பினர்களும் சுயநலம் கருதாது முயற்சி செய்ததன் பயனாக 1971இல் புதிய கட்டிடத்துக்கான அத்திவாரம் இடப்பெற்றது. கட்டிட வரைபடம் கட்டிடக் கலைஞர் வி.எஸ்.துரைராஜா அவர்களால் தயாரிக்கப்பட்டு படிப்படியாக கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. சங்கத்தின் இத்தகைய வளர்ச்சிப்பணியின் தொடர்ச்சியாக திரு. ஆ.மா. சுப்பிரமணியம் அவர்களும் அவரது துணைவியார் திருமதி மாலதி சுப்பிரமணியம் அவர்களும் இணைந்து வழங்கிய நிதியுதவியில் சங்கத்தின் மூன்றாம் மாடி தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. 30.04.2006 அன்று இம்மண்டபம் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட வேளையில் வெளியிடப்பட்ட திறப்பு விழா மலர் இதுவாகும்.