17074 நினைவுகளே எங்கள் கேடயம்: நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் பதிவுகள்.

என்.செல்வராஜா. லண்டன்: ஐரோப்பியத் தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வகமும், இணை வெளியீடு: கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜனவரி 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

xx, 442 பக்கம், விலை: ரூபா 1500., அளவு: 24×17.5 சமீ., ISBN: 978-624-6164-63-8.

இத்தொகுப்பு 03.01.1974 இல் ஆரம்பமாகி 10.01.1974 அன்று பாரிய அரச வன்முறையின் விளைவாக, 11 தமிழ் மக்களின் உயிர்ப் பலியுடன் முடிவுக்கு வந்த நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு பற்றியதாகும். 2024இல் ஐம்பதாண்டுகளைக் கடந்து செல்லும் இம்மாநாட்டின் நினைவலைகளைத் தேக்கி, எதிர்காலச் சந்ததியினருக்காக ஆவணப்படுத்திவைக்கும் பாரிய தனிநபர் முயற்சி இதுவாகும். மாநாட்டின் பின்புலம், உள்வீட்டு இழுபறிகள், மாநாட்டு நிகழ்ச்சிகள், 10ம் திகதிக் குழப்பம், அவை தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கைகள், இம்மாநாடு தொடர்பாகப் புத்திஜீவிகளினால் எழுதப்பட்ட அறிக்கைகள், பத்திரிகைச் செய்திகள் என இவ்வாவணத் தொகுப்பு நான்காவது அனைத்தலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை மீள எம் கண்முன் நிறுத்துகின்றது. ‘என்.செல்வராஜா அவர்கள் 1974இல் நடைபெற்ற மாநாடு பற்றிச் செய்தித் தாள்களிலும் நூல்களிலும் கட்டுரைகளிலும் வெளிவந்த விஷயங்கள் எல்லாவற்றையும் மிகுந்த சிரமத்தோடு தேடிப்பெற்று ஒரு களஞ்சியமாகத் தொகுத்துள்ளார். அம்மாநாடு நடைபெற்று 50 ஆண்டுகள் நிறைவுபெறும்வேளையில் இதனை அவர் வெளியிடுகின்றமை பாராட்டிற்குரியது. இந்நூல் ஓர் உன்னதமான வரலாற்று ஆவணத் தொகுப்பாகும்’ (பேராசிரியர் சி.பத்மநாதன், அணிந்துரையில்).

ஏனைய பதிவுகள்

16975 வரலாற்று உலா.

ஆ.சி.நடராசா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சிவத்தமிழ் மானிட விடியற் கழகம், 1வது பதிப்பு, 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 116 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ. இந்நூலில் பேராசிரியர் பரமு