17077 அபிவிருத்திக்கான இணைந்த செயற்பாடு: ஊடக அமைப்புகளினதும் சிவில் சமூகத்தினதும் பங்களிப்பு (ஊடக வளத் தொகுதி).

டில்ருக்ஷி ஹென்டுநெட்டி (ஆங்கில மூலம்), இராஜநாயகம் பாரதி (தமிழாக்கம்). கொழும்பு 7: சீடா நிறுவனம், (Canadian International Development Agency), பனோஸ் தெற்காசியா, 29, கிரஹரி வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை). 

38 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.

இக்கைந்நூல், ஊடகங்களுக்கும் சிவில் சமூகத்திற்கும் இடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்துவதையும், இவ்விதமான  இணைந்த செயற்பாட்டை  மேலும் அபிவிருத்தி  செய்வதற்கான வாய்ப்புகளைக் கண்டறிவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அறிமுகம், ஆசிரியரிடமிருந்து, அபிவிருத்தி ஊடகத்துறையை வரையறை செய்தல், முரண்பாடும் கருத்துக்கள் பற்றிய குறிப்பும், சிவில் சமூகத்தைப் புரிந்து கொள்ளல், ஊடகங்களைப் புரிந்து கொள்ளல், நெருக்கடியான உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள் தொடர்பில் ஊடகங்களின் கருத்து, ஊடகங்கள் தொடர்பான சிவில் சமூக அமைப்புக்களின் பார்வை, அடிப்படை முரண்பாடுகளைப் புரிந்து கொள்ளல், இணைந்து செயற்படுவதற்காக அடையாளம் காணப்பட்ட விடயங்கள், சுற்றாடல் தொடர்பான செயலமர்விலிருந்து, சமூக வானொலி ஒலிபரப்பாளர்களுக்கான செயலமர்விலிருந்து, பிராந்திய இணைப்புச் செயற்பாடுகள் தொடர்பான கற்கை, சில பொன் விதிகள், கூட்டுப் பணிகளில் ஏற்படும் இடைவெளிகளுக்கு பாலம் அமைத்தல், கிரவுண்ட் வியூஸ் ஊடகத்துறையில் பாராட்டத்தக்க முயற்சி: ஏனையவர்களால் கடக்கப்படாத பாதையில் செல்லும் யங் ஏசியா தொலைக்காட்சி விமர்சன – செய்தி வெளியீட்டின் ஊடாக ஒரு ஆழமான பார்வை, கூட்டணியாகவிருக்கும் சமூகங்களும் இயற்கைப் பாதுகாப்புக்கான ஊடகங்களும், கலைச் சொல் அகராதி, உசாத்துணைப் பட்டியல், செயலமர்வின் பங்காளிகள், நன்றி தெரிவிக்கப்பட வேண்டியவர்கள், பானோஸ் செயற்திட்ட செயலமர்வு (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14018).

ஏனைய பதிவுகள்